அன்புமணி, நடிகர் விவேக் கண்தானம்
சென்னை:மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், நடிகர் விவேக் ஆகியோர் தங்களது கண்களை தானம் செய்வதாகஅறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் உலக கண்தான தினம் நேற்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி சென்னையில் நடந்த நிகழ்ச்சியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ்தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அன்புமணி பேசுகையில், கண்தானம் குறித்த விழிப்புணர்வை இந்தியாவில் அதிகரிக்க வேண்டும்.ஆண்டுக்கு ஒரு லட்சம் கண்கள் இந்தியாவில் தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பதோ 23,000 கண்கள்தான்.
அனைவரும் கண் தானம் செய்ய முன்வந்தால் இந்த நிலை மாறும். எதிர்கால கண் தானத் திட்டத்தை கருதி எனதுவாழ்நாளுக்குப் பிறகு நானும் எனது கண்களைத் தானம் செய்கிறேன் என இந்த நிகழ்ச்சியின் மூலம்அறிவிக்கிறேன். என்னைப் பார்த்து இளைய சமுதாயத்தினர் பெருமளவில கண் தானம் செய்ய முன்வரவேண்டும்.
இந்தியாவில் 45 லட்சம் பேருக்கு கடந்த ஆண்டு கண் புரை அறுவைச் சிகிச்சை செய்ய இலக்குநிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 49 லட்சம் பேருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 லட்சம்பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 6 லட்சம் பேருக்கு செய்யப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் 2020ம் ஆண்டுக்குள் கண் பார்வை இல்லாதவர்களே இல்லை என்ற இலக்கைநிர்ணயித்துள்ளது. இதை இந்தியா நிச்சயம் அடையும் என்றார் அன்புமணி.
இதேபோல நடிகர் விவேக்கும் தனது பிறந்தநாளையொட்டி நேற்று கண்தானம் செய்தார். சாலிகிராமத்தில் உள்ளதனது அலுவலகத்திற்கு வந்த விவேக் அங்கு ரசிகர் மன்றத்தினர், திரையுலகினரின் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு கண் தானம் செய்வது தொடர்பான விருப்பப்படிவத்தை நிரப்பிக் கொடுத்து தனது கண்களை தானம் செய்வதாக தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications