பொருளாதார மண்டலங்கள்-தமிழகம் ஹை ஸ்பீட்
சென்னை :தமிழகத்தில் அமைக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உலக வர்த்தகநிறுவனங்களை பெருமளவில் ஈர்த்து வருகின்றன. கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ.2,750 கோடி அளவுக்கான முதலீடுகளை இந்த மண்டலங்கள் ஈர்த்துள்ளன.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (ஸ்பெஷல் எகனாமிர் சோன்ஸ்) அமைத்துமுதலீட்டையும் தொழிற்சாலைகள் நிறுவனங்களை ஈர்க்க நாடு முழுவதும்மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நடந்து வருகிறது.
இந்த மண்டலங்களுக்குத் தேவையான நிலங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாகபெரும்பாலான மாநிலங்களில் பெரிய அளவில் பஞ்சாயத்து நடந்து வருகிறது.எதிர்ப்புகள்,போராட்டங்கள் களை கட்டிக் கொண்டுள்ளன.
ஆனால் தமிழகத்திலோ நிலைமை தலைகீழாக உள்ளது. பாமக மட்டுமே முதலில்சத்தம் போட்டது. இப்போது அதுவும் அமைதியாகிவிட்டது.
இதனால் சத்தமே போடாமல் இங்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குதொழிற்சாலைகளும் வந்திறங்கி உற்பத்தியையும் தொடங்கி விட்டன. மேலும்முதலீடுகளும் குவிந்து வருகின்றன.
தமிழகத்திற்கு மொத்தம் 45 பொருளாதார மண்டலங்கள் அமைக்க அனுமதிவழங்கப்பட்டது.
இதில் 20 மண்டலங்கள் தகவல் தொழில்நுட்பத் துறைக்காக ஒதுக்கப்பட்டவை. 19சிறப்பு பொருளாதார மண்டலங்களில் குறிப்பிட்ட தொழிலை மட்டுமே மேற்கொள்ளமுடியும். 6 மண்டலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யஅனுமதி தரப்பட்டுள்ளன.
ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள நோக்கியா சிறப்பு பொருளாதார மண்டலம்,ஃபிளக்ஸ்ட்ரானிக்ஸ் சிறப்பு மண்டலம், மஹிந்திரா வேர்ல்டு சிட்டி, பள்ளிக்கரணைதகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவைசெயல்பாட்டுக்கு வந்து விட்டன.
இவற்றின் மூலம் 2006-07ம் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் ரூ. 2,750கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களும்செயல்பாட்டுக்கு வந்தால் முதலீடுகள் மேலும் பன்மடங்காகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications