தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டையடி
டெல்லி:அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை முறைப்படுத்தும் வகையில் தமிழக அரசுகொண்டு வந்த சட்ட திருத்தம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழகஅரசும் ,சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் தாக்கல் செய்த அப்பீல் மனுக்களைஉச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
முறைகேடாக, அனுமதியில்லாமல் கட்டடம் கட்டவும், சட்டத்தை மீறி செயல்படவும்மக்களுக்கு அனுமதி அளித்ததன் மூலம் சென்னை நகரமே வாழ தகுதியற்றதாகிவிட்டது என்றும் நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழகத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை முறைப்படுத்த(அபராதம் வாங்கிக் கொண்டு கட்டடத்துக்கு உரிய அனுமதி அளித்தல்) சட்டம்கொண்டு வரப்பட்டது. இதன்படி ஒரே ஒரு முறை முறைப்படுத்தல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது. 99ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இந்தக்கட்டடங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் கட்-ஆப் தேதியைநிர்ணயித்தது.
ஆனால், அந்தத் தேதிக்குப் பிறகும் சட்ட விரோத கட்டடங்களை முறைப்படுத்தும்வகையில் 2000, 2001, 2002 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சட்ட திருத்தம்கொண்டு வரப்பட்டது.
இந்த சட்ட திருத்தங்களை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.
மேலும் வாகனங்களை நிறுத்த இடமே விடாமல் சென்னையில் பல இடங்களில்வர்த்தக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், இதற்கு அனுமதியளித்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ராமசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நலமனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக நுகர்வோர் நடவடிக்கை குழுவும் வழக்குப் போட்டது.
இம்மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துருஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, தமிழக அரசுகொண்டு வந்த சட்டத் திருத்தங்கள் செல்லாது தீர்ப்பளித்தது.
இதனால் முறைகேடாகக் கட்டப்பட்ட கட்டடங்களை இடித்துத் தள்ள வேண்டிய நிலைஉருவானது.
இந் நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், சென்னைபெருநகர வளர்ச்சி குழுமமும் ( சி.எம்.டி.ஏ), வர்த்தகர் சங்கங்களும், கட்டுமானஅதிபர்கள் சங்கமும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த மனுக்களை நீதிபதிகள் எச்.கே.சீமா, பி.கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர்அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
தமிழக அரசு மற்றும் சி.எம்.டி.ஏ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பராசரன்வாதாடுகையில்,
விதிகளை மீறிய கட்டடங்களை முறைப்படுத்த கொண்டு வரப்பட்டசட்டத்திருத்தத்துக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால்,சென்னை உயர் நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறி இந்தத் தீர்ப்பில்தலையிட்டுள்ளது. விதிகளை மீறிய கட்டடங்களை முறைப்படுத்த தமிழக அரசுக்குஉள்ள அதிகாரத்தை உயர் நீதிமன்றம் பறித்து கொண்டுள்ளது. இது அரசின் கொள்கைமுடிவில் தலையிடும் விஷயம் என்றார்.
இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள் கூறியதாவது:
சட்டங்களை மீற மக்களை அனுமதித்தன் மூலம் சென்னை நகரை தமிழக அரசுபாழ்படுத்தி விட்டது. மக்கள் நிம்மதியாக வாழ விடுங்கள். நாடு நன்றாக இருக்கவேண்டும், அதற்காக சில ஒழுக்க நடைமுறைகள் அமலில் இருந்தாக வேண்டும்.
சென்னையின் கடந்த காலத்தையும், தற்போதைய காலத்தையும் ஒப்பிட்டு பாருங்கள்.சென்னை நகரம் முழுவதுமே வாழ தகுதியற்றதாகி விட்டது. கட்டடங்கள் அமைக்கசட்டங்கள் இருக்கும்போது அதைப் பின்பற்றாவிட்டால், அந்த சட்டம் எதற்கு?
விதிமுறை மீறிய கட்டடங்களை முறைப்படுத்த ஒரே ஒரு முறை சட்டத்திருத்தத்துக்குஅனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த சட்டத் திருத்தத்தையே நீட்டித்து நீட்டித்துதொடர்ந்து பயன்படுத்தி வந்ததை அனுமதிக்க முடியாது.
விதிமுறைகளை தடுக்க சிஎம்டிஏ சட்டத்தில் போதிய நடைமுறைகள் உள்ளன.ஆனால், அந்தத் துறை தனது கடமையை செய்யாத போது உயர் நீதிமன்றம் சரியானதீர்ப்பையே அளித்துள்ளது. அந்தத் தீர்ப்பு சரியானதே.
சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றத்தால்நியமிக்கப்பட்ட கண்காணிப்பு குழு அனைத்து விஷயங்களையும் ஆய்வுசெய்யட்டும்.
இதனால் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நாங்கள் தலையிட எந்தகாரணமும் இல்லை. எனவே அப்பீல் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடிசெய்கிறோம் என நீதிபதிகள் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications