சேப்பலுக்கு எம்.பிக்கள் கடும் கண்டனம்
டெல்லி:
இந்திய எம்.பிக்கள் சம்பளம் வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவார்கள் என்று இந்திய கிரிக்கெட்அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கூறியதற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதிய 2வது ஒரு நாள் போட்டியில் படு மோசமாகதோல்வி அடைந்ததற்கு நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளைச் சேந்த எம்.பிக்கள் கடும் கண்டனம்தெரிவித்துப் பேசினர்.அப்போது பெரும்பாலான எம்.பிக்கள் பயிற்சியாளர் சேப்பலை கடுமையாக விமர்சித்தனர். இதுகுறித்து கருத்துதெரிவித்த சேப்பல், இந்திய எம்.பிக்கள் பேசியதில் நான் வியப்படையவில்லை. அவர்கள் சம்பளம்பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவார்கள் என்று கூறியிருந்தார்.
இதற்கு லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்ட எம்.பிக்கள் கடும் தெரிவித்துள்ளனர்.இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், இதுபோன்ற கருத்துக்களைக் கூற அவருக்குதகுதி இல்லை. அது அவரது வேலையும் அல்ல. இந்திய ஜனநாயகம் குறித்து ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல்அவர் இவ்வாறு பேசக் கூடாது என்றார் குப்தா.
சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறுகையில், நமக்கு உத்தரவிட, நம்மை விமர்சிக்க அவருக்கு தகுதி கிடையாது.நமக்கு பாடம் நடத்த யாரும் தேவையில்லை என்று கடுமையாக கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், இந்திய கிரிக்கெட் வாரிய துணைத் தலைவருமான ராஜீவ் சுக்லாகூறுகையில், எம்.பிக்கள் குறித்து இவ்வாறு சேப்பல் பேசியிருக்கக் கூடாது. அவருடன் இந்திய கிரிக்கெட்வாரியம் சார்பில் பேசி, இதுகுறித்து விவாதிக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
சமாஜ்வாடி கட்சி தலைவரான மோகன் சிங் கூறுகையில், நம்மால் 50 ஓவர்களைக் கூட முழுமையாக விளையாடமுடியவில்லை. இதுதொடர்பாக எம்.பிக்கள் தங்களது கருத்துக்களைத்தான் எடுத்து வைத்தார்கள். ஆனால்அதற்கு சேப்பல் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இதுபோன்ற குப்பை விஷயங்களையெல்லாம் நாடாளுமன்றத்தில் விவாதித்து நமது பொன்னான நேரங்களைவீணாக்கக் கூடாது என்று கூறினார்.
சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அமர்சிங் கூறுகையில், சேப்பல் போக வேண்டும் என்பது ரசிகர்களின்ஏகோபித்த கருத்து. இதை கிரிக்கெட் வாரியத் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவார் புரிந்து கொண்டுதீவிரமாக யோசிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக மக்களவையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் முகம்மது சலீம் மற்றும் வாசுதேவ்ஆச்சாரியா ஆகியோர், சேப்பல் தெரிவித்த கருத்துக்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றார். ஆனால்இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத பிரச்சினைகளை பேசி நமது நேரத்தை வீணடித்து, நமது வழக்கமானபணிகளிலிருந்து விலக வேண்டாம் என்று கருத்து தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் பாஜக எம்.பி. வி.கே.மல்ஹோத்ரா பேசுகையில், இந்திய அணி சிறப்பாக விளையாடத்தேவையான கடுமையான நடவடிக்கைகளை சரத் பவார் எடுக்க வேண்டும் என்று கோரினார்.
மார்க்சிஸ்ட் உறுப்பினர் பிருந்தா காரத் கூறுகையில், கங்குலியை உடனடிாயக அணியில் சேர்க்க வேண்டும்.சரியாக விளையாடத வீரர்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications