பிரணாப் முகர்ஜியுடன் ராஜபக்சே சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தையும், வட கிழக்கு மாகாண இணைப்புதிட்டத்தையும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே மதித்து, அதற்கு சட்டப்பூர்வ பாதுகாப்புதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவுக்கும், இலங்கைக்கும்இடையே கடந்த 1987ம் ஆண்டு ஒப்பந்தம் உருவானது. இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் இந்த ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தப்படி தமிழர்கள் அதிகம் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்இணைக்கப்பட்டன. இந்திய, இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள்ஏற்கவில்லை, நிராகரித்து விட்டனர்.

இந் நிலையில், வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பு முடிவு செல்லாது என்றுஇலங்கை உச்சநீதமன்றம் அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது. இதனால் இனப்பிரச்சினையில் புதிய திருப்பம் ஏற்பட்டது.

இந் நிலையில், அமைதி ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த இலங்கை அரசுஉறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், வடக்கு கிழக்கு மாகாண இணைப்புக்குசட்டப்பூர்வ அந்தஸ்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை வலியுறுத்தியுள்ளதாக செய்திகள்வெளியாகியுள்ளன.

சமீபத்தில், இலங்கை சென்ற வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனன் மூலம் இந்தசெய்தியை ராஜபக்ஷேவுக்கு பிரதமர் தெரிவித்தார்.

இந்திய அரசின் இந்த வலியுறுத்தல், இலங்கை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பேஇலங்கையிடம் உறுதியாக தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.மேலும், வடகிழக்கு மாகாண இணைப்பை சட்டப்பூர்வமாக உறுதி செய்யுமாறுஇலங்கைக்கு உதவி செய்யும் நன்கொடையாளர் நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

சமீபத்தில் ராஜபக்ஷேவை சந்தித்த மேனன், இலங்கை அமைதி ஒப்பந்தம், இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம். அப்படிப்பட்ட ஒப்பந்தம் சர்வதேச சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டது. எனவே உள்ளூர் சட்டத்தால் அந்த ஒப்பந்தத்தைதூக்கிப் போட்டு விட முடியாது என்று இந்தியாவின் கண்டிப்பான கருத்தைதெரிவித்துள்ளார்.

மேலும் இந்த இணைப்பு தமிழர்களுக்குத் தேவையான அரசியல் அங்கீகாரத்தைவழங்க உதவி செய்யும் ஒன்று என்றும் மேனன் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் தன்னை ராஜபக்ஷே சந்திக்கும்போது, மன்மோகன் சிங்கும் இந்தக்கருத்தை தீவிரமாக வலியுறுத்துவார் என்று தெரிகிறது. இந் நிலையில் இன்றுவெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை ராஜபக்சே சந்தித்துப் பேசினார்.அப்போது இந்தியாவின் நிலை குறித்து ராஜபக்சேவிடம் பிரணாப் விளக்கினார்.

ராஜபக்ஷேவுக்கும் வட கிழக்கு இணைப்பு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில்அதிருப்தி இருப்பதாகத் தெரிகிறது. 2 வாரங்களுக்கு முன்பு தன்னை சந்தித்த தமிழ்தேசிய கூட்டணி எம்.பிக்கள் குழுவிடம், உச்சநீதிமன்றத் தீர்ப்பு தனக்கு அதிருப்திஅளிப்பதாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பான நிவர்த்தி நடவடிக்கைகளை தான்எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதே கருத்தை மேனனிடமும்ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்திய, இலங்கை ஒப்பந்தத்திற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கொடுக்கும்ராஜபக்ஷே அரசின் முயற்சிகளுக்கு முழு ஆதரவு தருவதாக மேனனிடம்,எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கேவும்உறுதியளித்துள்ளார்.

அதேசமயம், வட கிழக்கு இணைப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுக்கமுயன்றால் அரசுக்குக கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என சிங்களகட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா எச்சரித்துள்ளது. இந்தக் கட்சிதான் வட கிழக்குஇணைப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.

ராணுவம்-புலிகள் கடும் மோதல்:

இந் நிலையில் தனி ஈழமே ஒரே தீர்வு என விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் திட்டவட்டமாக அறிவித்து விட்ட நிலையில் இன்றுகாலை முதல் விடுதலைப் புலிகள், ராணுவத்துடன் கடும் தாக்குதலை தொடங்கியுள்ளனர்.

மாவீரர் தினத்தையொட்டி நேற்று தமிழீழ தொலைக்காட்சியில் பிரபாகரன் உரை நிகழ்த்தினார். அப்போது, தமிழீழமே ஒரே தீர்வு எனதிட்டவட்டமாக அறிவித்தார். இதையடுத்து இலங்கையில் போர் உச்சகட்டத்தை எட்டும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை மட்டக்களப்பில் உள்ள ராணுவ முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் அதி நவீன பீரங்கிகள் மூலம் கடும் தாக்குதலைமேற்கொண்டனர்.

இந்த அதிரடித் தாக்குதலால் ராணுவ வீரர்கள் நிலை குலைந்தனர். ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து கடும் சண்டை நடந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல வட கிழக்கு இலங்கையில் மேலும் பல இடங்களில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தனி ஈழத்தை அடைவோம் என பிரபாகரன் அறிவித்த அடுத்த நாளே கடும் சண்டை மூண்டுள்ளதால், இலங்கை நிலை மேலும் சிக்கலாகியுள்ளது.

அரசுக்கு புலிகள் 2 வாரம் கெடு:

இதற்கிடையே யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையை (ஆல்ஃபா 9) 2 வாரத்திற்குள் திறக்கஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்களே திறப்போம் எனவிடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரயைன் அளித்துள்ளபேட்டி:

யாழ்ப்பாணத்தை இணைக்கும் நெடுஞ்சாலை நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளது.தமிழர்களைப் பட்டினிப் போட்டு சாகடிக்க வேண்டும் என்ற இலங்கை அரசின்இனவெறி காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த செயல் போர் ஒப்பந்த நிறுத்தத்தை மீறும் செயலாகும்.இன்னும் 2 வாரத்திற்குள இந்த சாலையை திறக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் புலிகளே இந்தப் பாதையை திறந்து விடுவார்கள் என்றுகூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+