தனி ஈழமே ஒரே தீர்வு: பிரபாகரன்
கிளிநொச்சி:தனித் தமிழ் ஈழமே இனப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு. அதை அடுத்த ஆண்டில் தமிழீழ மக்களைத் திரட்டிஅடைவோம் என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
![]() |
தமிழீழ மாவீரர் நாளை விடுதலைப் புலிகள் நேற்று அனுசரித்தனர். இதையொட்டி விடுதலைப் புலிகள் வசம்உள்ள தமிழர் பகுதிகளில் கொடிகள் ஏற்றப்பட்டும், நினைவுச் சுடர் ஏற்றப்பட்டும் மறைந்த வீர்ரகளுக்கு அஞ்சலிசெலுத்தப்பட்டது.
இதையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி மூலம் பிரபாகரன் உரைநிநகழ்த்தினார். சுமார் ஒரு மணி நேர உரைக்குப் பின்னர் மாலை 6.05 மணிக்கு நினைவுச் சுடரை ஏற்றி வைத்துஅஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக பிரபாகரன் ஆற்றிய உரை:
எனது அன்புக்கும், மதிப்புக்கும் உரிய தமிழீழ மக்களே,இன்று மாவீரர் நாள். இந்த நாளை எமது மாவீரர்களின் பெருநாளாக, எமது தியாகிகளின் திருநாளாக, எமதுதேசத்தின் தேசிய நாளாக, எமது இனம் சுதந்திரம் வேண்டி, உறுதியுடனும், புரட்சி நாளாக நாம்கொண்டாடுகிறோம்.
இந்த உலகத்தைத் துறந்து, இளமையின் இனிமையான உணர்வுகளைத் துறந்து, சாதாரண வாழ்வின்சகலவற்றையும் துறந்து, எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமதுஉன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்துஅந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரணமனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள். உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகிநிற்கிறார்கள்.
தோற்றம், மறைவு, என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கும் இந்தக் காலநதியில், காலத்திற்குக் காலம் தோன்றி மறையும், நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனித வாழ்வு சாவோடுமுடிந்து போகிறது, முற்றுப் பெறுகிறது.
மனித நாகரீகம் தோன்றிய காலம் தொட்டே மனிதகுலம் விடுதலை வேண்டி வீறுடன் போராடி வருகிறது.வீறுகொண்டெறியும் இந்தப் போராட்டங்களை அடக்கியொடுக்க ஆக்கிரமிப்பாளர்களும்,அடக்குறையாளர்களும், காலங்காலமாகப் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறார்கள்.
முதலிற் போர் அரக்கனை ஏவுவதும் அது முடியாது போக போராடும் இனங்களின் விடுதலைப் பாதையைத்திருப்பி, அவர்கள் போகும் வழிகளெல்லாம்பொறிகள் வைத்து, சமாதான சதிவலைக்குள் சிக்க வைத்து,காலத்தால் மோசம் செய்து, சமாதான மாயைக்குள் தள்ளி விட்டு, அமைதியாக அழித்தொழிப்பதுவும்வரலாற்றிலே நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகின்றன.
இந்த உத்தியை எமது சுதந்திர இயக்கத்திற்கெதிராகவும் செயற்படுத்தி விடலாம் எனச் சிங்கள அரசு கனவுகாண்கிறது. ஆனால் இந்த ஐந்து ஆண்டுக்கால அமைதி முயற்சியில், இந்த அக்கினிப் பரீட்சையில், நாம் எரிந்துபோய் விடவில்லை. அழிந்து போய் விடவும் இல்லை.
மாறாக, இந்த வேள்வித்தீயிற் புடம் போடப்பட்டு, புதிய புலிகளாகப் புதுப் பொலிவுடன், எழுந்து நிற்கிறோம்.தமிழரின் பலமும், வளமும் ஒன்று குவிந்து பலம் மிக்க, வலுமிக்க ஒரு பராக்கிரமச் சக்தியாக எழுந்துநிற்கிறோம்.இந்த இமாலயச் சக்தியின் ஊற்று வாய்கள் எமது மாவீரர்கள் என்பதை இந்நாளில் நான் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
எமது வீர விடுதலை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையில் நாம் இன்று நிற்கிறோம். மிகவும் நீண்ட,கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத சவால்களை, எதிர்பாராத திருப்பங்களை எதிர்கொண்டுநிற்கிறோம். வரலாற்றில் என்றுமில்லாதவாறு போரையும், பேச்சையும் சம காலத்திலே சந்தித்து நிற்கிறோம்.
போருக்கு ஓய்வு கொடுத்து, சமாதான வழியிற் சமரசப் பேச்சுக்கள் வாயிலாக எமது மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் நேர்மையுடனும், நெஞ்சுறுதியுடனும் முயற்சித்து ஆறு ஆண்டுகள் அசைந்தோடிவிட்டன. நாம் அமைதி காத்த இந்த ஆறு ஆண்டுக் காலத்தில் இந்த நீண்ட கால விரிப்பில், தணியாத நெருப்பாகஎரிந்து கொண்டிருக்கும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதா?
தமிழரைச் சதா கொடுமைப்படுத்திக் கொன்றொழித்து வரும் சிங்கள ஆட்சியாளர்களின் மனவுலகில் மாற்றம்நிகழ்ந்ததா? தமிழரின் நீதியான நியாயமான கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்பட்டனவா? ஆக்கிரமிப்புராணுவத்தின் அடாவடித்தனங்களால் நாள்தோறும் அவலத்திற்கும், இம்சைக்கும் ஆளாகி எம் மக்களுக்கு நிம்மதிகிடைத்ததா? எம் மக்களை நாளாந்தம் அழுத்தி வரும் அன்றாட அவசியப் பிரச்சினைகள்தானும் தீர்த்துவைக்கப்பட்டனவா? எதுவுமே நடக்கவில்லை.
மாறாக எத்தனையோ கனவுகளோடு எத்தனையோ கற்பனைகளோடு, நீதி கிடைக்குமெனக் காத்திருந்ததமிழருக்குச் சாவும் அழிவுமே பரிசாகக் கிடைத்திருக்கின்றன. சோதனை மேற் சோதனையாக, வேதனை மேல்வேதனையாகத் தாங்க முடியாத, துயரச் சுமை தமிழர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வேதனையால் அழுதழுதுகண்ணீர் தீர்ந்து, இரத்தமே கண்ணீராக வருகின்ற சாாேகம் தமிழினத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது.
மொத்தத்தில இந்த அமைதிக் காலம் தமிழர் வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத ரத்தம் தோய்ந்த இருண்டகாலமாக மாறியிருக்கிறது. அமைதி போதித்த உலக நாடுகள், மெளனத்திற்குள் தமது மனத்தாட்சியை புதைத்துவிட்டு, கண்களை மூடிக் கொண்டு அமைதியாக இருக்க, தமிழர் மண்ணில் பெரும் மனித அவலம் இன்றுஅரங்கேறி வருகிறது.
பிரதான வழங்கற் பாதைக்கு மூடு விழா நடாத்திய சிங்கள அரசு, தமிழரை அவர்களது சொந்த மண்ணிலேயேசிறை வைத்திருக்கிறது. எமது மக்களின் சுதந்திரத்தைப் பறித்து, அவர்களது சமூக வாழ்வைத் துண்டித்து நான்குசுவர்களுக்கு மத்தியில் அவர்களைத் தடுத்து வைத்து, அவர்களது நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகளைப் போட்டுகொடுமைப்படுத்துகிறது.
தமிழரின் தாயகத்தைப் பிரதேசங்களாகப் பிரித்து, வலயங்களாக வகுத்து, இராணுவ அரண்களை அமைத்து,முட்கம்பி வேலிகளால் விலங்கிட்டு, சோதனைச் சாவடிகளால் நிறைத்து, ஒரு பிரமாண்டமான மனிதவதைகமாகமாக மாற்றியிருக்கிறது.
இராணுவ அழுத்தம், பொருளாதார நெருக்குதல் என இரு முனைகளில் எமது மக்கள் மீது சிங்கள அரசுயுத்தத்தை ஏவி விட்டிருக்கிறது. வகை தொகையற்ற கைதுகள், சிறை வைப்புக்கள், சித்திரவதைகள், பாலியல்வல்லுறவுகள், கொலைகள், காணாமல் போதல்கள், எறிகணை வீச்சுக்கள், விமானக் குண்டு வீச்சுக்கள்,தொடர்ச்சியான போர் நடவடிக்கைகள் என எம் மக்கள் மீது இராணுவ அழுத்தம் என்றுமில்லாதவாறுஇறுக்கமாக்கப்பட்டிருக்கிறது.
மக்கள் வாழிடங்கள், இராணுவ அரண்களாலும், படை நிலைகளாலும் நிரப்பப்படுகின்றன. மறுபுறத்தில் உணவுத்தடை, மருந்துத் தடை, பொருளாதாரத் தடை, போக்குவரத்துத் தடை, மீன் பிடித் தடை என எம் மக்கள் உயிரோடுவாட்டி வதைக்கப்படுகிறார்கள்.
போர் நிறுத்தம் செய்து, சமாதானப் பேச்சுக்கள் நடத்தி, ஐந்து ஆண்டுகள் அமைதி காத்தபோதும், எம் மக்களுக்குச்சமாதானத்தின் பலா பலன்கள் எவையும் கிட்டவில்லை.அவர்களது வாழ்வு இருண்டு போய் நரகரமாகமாறியிருக்கிறது. தாங்க முடியாத அளவிற்கு அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சுமை எம் மக்களை வாட்டிவைதகிகறது. தொடரும் போரினால் எமது மக்கள் மிகவும் அவசரமான, வாழ்நலைத் தேவைகளையும் பாரியமனிதாபிமானப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு நிற்கிறார்கள்.
![]() |
பல்லாயிரம் மக்கள் தமது சொந்த வீடுகளிலிருந்து குடிபெயர்க்கப்பட்டு, நோயும், பிணியும் பசியும், பட்டினியும்வாட்ட அகதி காங்களில் அல்லற்படுகிறார்கள். எம் மக்களது உயிர் வாழ்விற்கான உணவையும், மருந்தையும்மறுத்து, பாதையைப் பட்டி, பட்டினிபோட்டுப் படுபாதகம் புரியும் சிங்கள அரசு எம் மக்களுக்குக் கருணை காட்டி,காருண்யம் செய்து, அரசியல் உரிமைகளை வழங்கி விடும் என யாரும் எதிர்பார்க்க முடியாது. அப்படிஎதிர்பார்ப்பது அரசியல் அசட்டுத்தனமே அன்றி வேறொன்றுமன்று.
பெளத்தப் பேரினவாதக் கருத்துக்கள் சிங்கள மனிதனின் மனவமைப்பின் ஆழத்தில் அழியாத கோடுகளாகப்பொறித்து விடப்பட்டிருக்கின்றன. இதனால் சிங்கள தேசம் போர் வெறி பிடித்துச் சன்னதமாடுகிறது, போர் முரசுகொட்டுகிறது.தமிழரின் தேசியப் பிரச்சினையை நாகரீகமாக அமைதி வழியில தீர்க்க அது முயற்சிக்கவில்லை.
உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தித் தமிழரைப் பட்டினி போட்டு அழித்தொழிக்கவே அது விரும்புகிறது.வன்முறைகளைத் தூண்டி, போரைத் தீவிரப்படுத்தி, தமிழரை அடிமை கொண்டு ஆழவே அது கங்கணங் கட்டிநிற்கிறது.
காலியில் தமிழர் தாக்கப்பட்டமையும், இதனையே எடுத்துக் காட்டுகிறது. எமது விடுதலை இயக்கமும் சரி, எமதுமக்களும் சரி என்றுமே போரை விரும்பியதில்லை. வன்முறைப் பாதையையும் விரும்பியதில்லை. நாம்சமாதானத்தையே விரும்புகிறோம். சமாதான வழிமுறை தழுவி, அமைதி வழியில் எமது மக்களின் அரசியல்உரிமையை வென்றெடுக்க நாம் என்றுமே தயங்கியதுமில்லை.
இதனால்தான் திம்புவில் தொடங்கி ஜெனீவா வரை பல்வேறு தடவைகள் பல்வேறு காலகட்டங்களிற் பல்வேறுநாடுகளிற் பேச்சுக்களை நடாத்தியிருக்கிறோம். நோர்வேயின் அணுசரணையோடும், சர்வதேச் சமூகத்தின்ஆசிர்வாதத்தோடும், உலக நாடுகளின் தலைநகரங்களில் நடந்து வரும் தற்போதைய சமாதான முயற்சிஅடிப்படையில் வித்தியாசமானது.
இன்றைக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நோர்வேயின் விசேட சமாதான தூதராக இருந்த எரிக் சொல்கெய்ம்ஐப்பசி 31, 2000ம் ஆண்டு வன்னிக்கு அமைதிப் பயணம் மேற்கொண்டு எம்மைச் சந்தித்ததோடு, இந்தசமாதானப் பயணம் ஆரம்பமாகியது.
இது வித்தியாசமான காலத்தில், வித்தியாசமான வரலாற்றுச் சூழலில் வித்தியாசமான வடிவத்தில் , வித்தியாசமானபாதையில் பயணிக்கிறது. அமைதிக்கான முன்னெடுப்புகள் ஒருபுறமாகவும், சிங்கள அரசின் போர் நடவடிக்கைமறுபுறமாகவும் இரு தளங்களிலே நகர்கிறது. தமிழரின் குருதியைக் குடித்து, தமிழரின் எண்ணற்ற உயிர்களைக்காவு கொண்டு, காலத்தால் உப்பிப் பெருத்து வெடிப்பதற்குத் தயாராக தருணம் பார்த்து நிற்கிறது.
நாம் அமைதி காத்த ஆறு ஆண்டுக் காலத்திலே சமாதான நடவடிக்கைகளில் நீதியாகவும், நேர்மையாகவும் நடந்துகொண்டோம். சமாதானத்திற்கான முன்னெடுப்புகளையும், முன் முயற்சிகளையும் நாமே முதலில்மேற்கொண்டோம்.
முதன் முதலாகப் போர் நிறுத்தத்தை ஒரு தலைப்பட்சமாக பிரகடனப்படுத்தி, நம்பிக்கைகளைக்கட்டியெழுப்புவதற்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான நல்லண்ெண நடவடிக்கைகளை மேற்கொண்டு,சமாதானத்திற்கான உறுதியான அத்திவாரத்தை அமைத்தோம். பேச்சுக்களில் நியாயமற்ற நிபந்தனைகளையோ,நிர்ப்பந்தங்களையோ போடாது, வரம்புகளையோ, வரையறைகளையோ விதிக்காது, காலக் கட்டுப்பாடுகளைத்திணிக்காது அமைதி முயற்சிகளை முன்னெடுத்தோம். இவற்றை நாம் பலவீனமான நிலையில் நின்றுமேற்கொள்ளவில்லை.
வன்னிப் பெரும்பரப்பையும், இயக்கச்சி-ஆனையிறவுக் கூட்டப்படைத் தளத்தையும் மீட்டெடுத்தோம். சிங்களராணுவத்தின் அக்கினிகீல முன்னேற்ற நடவடிக்கையை முறியடித்தோம். உலகின் போரியல் வரலாற்றில்,மகத்தான சாதனைகளைப் புரிந்து இராணுவ மேல் நிலையில், நின்று கொண்டே இத்தனையையும்மேற்கொண்டோம்.
தென்னிலங்களையிலோ நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது. தோல்வி மேல் தோல்வியைப் பெற்று, போரிடும்மனோ நிலை குலைந்து, இராணுவத்தின் முதுகெலும்பு உடைந்து, நாட்டின் பொருளாதாரம் படுத்துத் தள்ளாடியநிலையிலேயே சிங்களத் தேசம் சமாதானப் பேச்சிற்குச் சம்மதித்தது.
இந்த சமாதான முயற்சி ஆரம்பித்ததிலிருந்து இற்றை வரையான ஐந்து ஆண்டுக்காலத்தில், ரணில், சந்திரிகா,மகிந்த என மூன்று அரசுகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கின்றன.ஒவ்வொரு தடவையும் ஆட்சிகள் மாற மாற சமாதான முயற்சிகளும் ஒரு சிறையிலிருந்து மீட்கப்பட்டுஇன்னொரு சிறைக்குள் தள்ளப்பட்டன. சமாதானப் புறாவும் கூடு விட்டுக் கூடு தாவியதே தவிர அதனால்சுதந்திரமாகச் சிறகடித்துப் பறக்க முடியவில்லை. கூட்டுப் பறவையாகிக் கூட்டுக்குள்ளேயே குத்தப்பட்டு இன்றுகுற்றுயிராகக் கிடக்கிறது.முதலில் ரணில் அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஆறு மாதங்கள் அமைதிப் பேச்சுநடாத்தினோம். கடந்த அரசுகளைப் போலவே ரணில் அரசும் வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றாது,ஏற்றுக் கொண்ட ஒப்பந்த விதிகளையும், கடப்பாடுகளையும் செயல்படுத்தாது, காலத்தை இழுத்தடித்தது. எமது மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க மறுத்த ரணில் அரசாங்கம், எமது விடுதலைஇயக்கத்தை உலக அரங்கிலே ஒதுக்கி, ஓரம் கட்டுகின்ற வேலையையும் இரகசியமாக மேற்கொண்டது.இலங்கைக்கு உதவி வழங்குவதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் நாம் பங்கு பற்றுவதற்கான வழிவகைகளைச் செய்யாது எம்மை உலக நாடுகளின் மத்தியில் அந்நியப்படுத்தி, அவமானப்படுத்தியது. இதனால்டோக்கியோ மாநாட்டை நாம் புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபை நாம் முன்வைத்தபோது அதிரடி அரசியல் மாற்றங்கள்நிகழ்ந்தன. சந்திரிகா தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்தது. எமது வரைபின்அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க மறுத்ததோடு, ஒட்டுக் குழுக்களை அரங்கேற்றி புதிய வடிவிற்புலிகளுக்கு எதிரான நிழற் போரை அவர் தீவிரப்படுத்தினார். இந்த ஆயுதக் குழுக்களின் அராஜகத்தால் தமிழர்தாயகம் வன்முறைக் களமாக மாறியது.இந்த சூழமைவில்தான் கடந்த ஆண்டு சிங்கள தேசத்தின் புதிய தலைவராக ராஜபக்ஷே தேர்வானார். அவரும்கடந்த காலச் சிங்கள தலைமைகளைப் போன்று இராணுவ பலத்திலும், இராணுவ அணுகுமுறையிலும் இராணுவவழித் தீர்விலுமே நம்பிக்கை கொண்டு செயற்படுகிறார்.தமிழ் மக்களது தேசியப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணுமாறு கடந்த ஆண்டு மாவீரர் நினைவுரையில்நான் விடுத்த இறுதியான, உறுதியான அவசர வேண்டுகோளையும் நிராகரித்துக் கடும் போக்கைக்கடைப்பிடித்துக் காலத்தை இழுத்தடித்து வருகிறார்.
புலிகளை அழிக்கும் இலக்குடன் ஒரு புறம் போரை தீவிரமாக முடுக்கி விட்டு, மறுபுறம் சமாதான வழித் தீர்வுபற்றிப் பேசுகிறார். போரும், சமாதானம் என்ற இந்த இரட்டை அணுகுமுறை அடிப்படையிலேயே தவறானது. தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, அதன் மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில், நின்று தான் விரும்பும்அரைகுறைத் தீர்வைத் தமிழர் தலையிற் கட்டி விட எண்ணுகிறது. இந்த போர்முனைப்புச் செயற்பாட்டாற் போர்நிறுத்த ஒப்பந்தம்செத்துச் செயலிழந்து போய்க் கிடக்கிறது. புலிகளின் இலக்குகளுக்கு எதிராக மும்முனைகளிலும்தாக்குதல் தொடரும் என அறிவித்து, மகிந்த அரசு ஒப்பந்தத்திற்கு ஈமக் கிரியைகளையும் நடத்திமுடித்திருக்கிறது.
பாரிய படைக்கலச் சக்தியையும், சுடுகச் சக்தியையும் ஒன்று குவித்து தமிழரின் தாயக நிலங்களைச் சிங்களஅரசாட்சியின் கீழ் கொண்டு வரப் புதிய புதிய படையெடுப்புகளை முடுக்கி விட்டது. இதனால் தமிழர் மண்முரணகளமாக மாறியது. இந்த நிலையில்தான் நாம் சிங்களத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதெனமுடிவெடுத்தோம்.
கிளாலியிலும், முகமாலையிலும் முன்னேறி வந்த இராணுவத்தை எமது படையணிகள் மின்னல் வேகத்தில்தாக்கியழித்தன.தமிழரின் நீதியான போராட்டத்தை திரிபுபடுத்தி, இழிவுபடுத்தி உலகெங்கும் பொய்யான விசமப் பிரசாரங்களைமுடுக்கி விட்டிருக்கிறது. எமது மக்களின் ஏகோபித்த எதிர்ப்பையும்,போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின்ஆட்சேபத்தையும் பொருட்படுத்தாது இலங்கை அரசின் இராஜரீக அழுத்தங்களுக்குப் பணிந்து, அதன்பொய்யான பரப்புரைகளுக்கு மசிந்து, ஐரோப்பிய ஒன்றியம், கனடாவும், எமது விடுதலை இயக்கத்தைபயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டன.
சிங்கள அரசு தனது போர்த் திட்டத்தைத் தடையின்றித் தொடர இது வழி வகுத்து விட்டது. அத்தோடு அமைதிமுயற்சிகளுக்கு உதவதாகக் கூறிக் கொள்ளும் சில உலக நாடுகள் சிங்களத்தின் இன அழிப்புப் போரைகண்டிக்காது, ஆயுத, நிதி உதவிகளை வழங்கி அதன் போர்த் திட்டததிற்கு முண்டு கொடுத்து நிற்கின்றன.
ராஜபக்ஷே, உள்நாட்டில் தமிழின அழிப்புப் போரை நடாத்திக் கொண்டு, உலக நாடுகளுக்கு சமாதானம்விரும்பும் ஒரு அமைதிப் புறாவாக தன்னை இனங்காட்ட முனைகிறார். தனது ஏமாற்று நாடகத்திற்கு பக்கத்துணையாக அனைத்துக் கட்சி மாநாட்டை கூட்டியிருக்கிறார். அந்த அனைத்துக் கட்சிக் குழுவும் கடந்த பத்துமாதக் காலமாக இருட்டுக்குள் கருப்புப் பூனையைத் தேடியலைபவன் போலத் தமிழர் பிரச்சினையைத்தேடியலைந்து கொண்டிருக்கிறது.
அனைத்துக் கட்சி மாநாடு பிசுபிசுத்துப் போக ரணில் கட்சியுடன் கை கோர்த்திருக்கிறார் மகிந்த.தென்னிலங்கையின் அரசியலை ஆட்டிப் படைத்து வரும் இரு பிரதான சிங்களக் கட்சிகளும், சாராம்சத்தில்இனவாத கட்சிகளே. ஒன்றோடொன்று போட்டி போட்டு பலப்பரீட்சை நடாத்தி, தமிழரின் உரிமையைப் பறித்து,தமிழரைக் கொன்று குவித்து கொடுமை இழைத்து வருபவையும் இந்த இரு கட்சிகளும்தான்.
எமது மக்களது அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் ஒரு நீதியான தீர்வை வரையறுக்கப்பட்ட ஒருகுறுகிய காலத்திற்குள் முன்வைக்குமாறு, இறுதியாகவும், உறுதியாகவும் மகிந்தவை நாந் கோரியிருந்தேன். அந்தஅவசர வேண்டுகோளை நிராகரித்து புறமொதுக்கி விட்டுகடந்த காலச் சிங்களத் தலைமைகள் போல மகிந்தாவும்தமிழின அழிப்புப் போரைத் தீவிரப்படுத்தியிருக்கிறார். தமிழர் தேசத்திற்கு எதிராகப் போர்ப்பிரகடனம்செய்திருக்கிறார்.
சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வைஒருபோதும் முன்வைக்கப் போவதில்லை என்பது இன்று வெட்ட வெளிச்சமாயிருக்கிறது. எத்தனை ஆண்டுகள்கடந்து சென்றாலும் எத்தனை யுகங்கள் ஓடி மறைந்தாலும் சிங்கள தேசத்தில் மனமாற்றம் நிகழப் போவதில்லை.
எனவே நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்தும் அதே பழைய பாதையில் நடைபோடஇனியும் நாம் தயாரில்லை. எம்மை நாமே ஏமாற்றகி கொள்ளவும் நாம் விரும்பவில்லை.
சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழமக்களுக்குத் திறந்து வைத்திருக்கிறது. எனவே இந்த விடுதலைப் பாதையில் சென்று, சுதந்திர தமிழீழத் தனியரசைநிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கிறோம்.
எமது அரசியல் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலக நாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம்.
வீறு கொண்டெழுந்திருக்கின்ற இந்த பெருமை மிகுந்த வரலாற்றுக் கால கட்டத்தில் உலகத் தமிழினத்தின்உதவியையும், பேராதரவையும் நாம் வேண்டி நிற்கிறோம். இந்த சந்தர்ப்பத்திலே எமது புலம் பெயர்ந்த உறவுகள்,காலங்காலமாக விடுதலைப் போராட்டத்திற்கு செய்து வரும் பெரும் பங்களிப்பிற்கும் உதவிகளுக்கும் எனதுஅன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமக்காக உணர்வுப்பூர்வமாக உரிமைக் குரல் கொடுத்து வரும் தமிழக உறவுகளுக்கும், தமிழகத்தலைவர்களுக்கும் எனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு, எமது தமிழீழத் தனியரசுநோக்கிய போராட்டத்திற்கு தொடர்ந்தும் நல்லாதரவும், உதவியும் வங்கி எமக்குப் பக்கபலமாகச் செயற்படுமாறுஅன்போடும், உரிமையோடும் வேண்டுகிறேன் என்றார் பிரபாகரன்.
தனி ஈழமே ஒரே தீர்வு என்று பிரபாகரன் திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் ஈழத்தில் போர் பெரிய அளவில்வெடிக்கும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.














Click it and Unblock the Notifications