மீண்டும் வந்தார் கங்குலி: லட்சுமண் து.கேப்டன்
![]() |
டெல்லி:
தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலிமீண்டும் இடம் பெற்றுள்ளார். வி.வி.எஸ். லட்சுமண் துணை கேப்டனாக்கப்பட்டுள்ளார்.
கேப்டன் பதவியிலிருந்து கங்குலி நீக்கப்பட்ட பிறகு அவர் ஓரம் கட்டப்பட்டார். கடந்த பல மாதங்களாக டெஸ்ட்அணியில் இடம் பெறாமல் இருந்து வந்த கங்குலிக்கு தற்போது மீண்டும் இடம் கிடைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறும் வீரர்கள் பட்டியலை இந்தியகிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு இன்று அறிவித்தது. மும்பையில் நடைபெறுவதாக இருந்த தேர்வுக் குழுக்கூட்டம் டெல்லியில் நடந்தது.
குழுத் தலைவர் வெங்சர்க்கார் தலைமையில் நடந்த தேர்வுக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் அணியில் இடம்பெற்றவீரர்களை வெங் சர்க்கார் அறிவித்தார். கங்குலிக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.
![]() |
வி.வி.எஸ். லட்சுமணும் அணியில் இடம் பிடித்துள்ளார். அவருக்கு துணை கேப்டன் பொறுப்பும் புதிதாகவழங்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் ஒரு நாள் போட்டித் தொடரில் கடைசி நேரத்தில் லட்சுமண்சேர்க்கப்பட்டார். கடைசி ஒரு நாள் போட்டியில் மட்டும் அவர் விளையாடவுள்ளார்.
இதுவரை துணை கேப்டனாக இருந்து வந்த ஷேவாக் அப்பொறுப்பிலிருந்து தூக்கப்பட்டுள்ளார். சரிவரவிளையாடததால் இந்த நடவடிக்கை எனத் தெரிகிறது.அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழக கிரிக்கெட் அணி கேப்டன் பத்ரிநாத் சேர்க்கப்படவில்லை. காம்பீர் மீண்டும்அணியில் இடம்பெற்றுள்ளார். இதேபோல வி.ஆர்.வி. சிங்கும் இடம் பிடித்துள்ளார்.
ஒரு நாள் போட்டிகளில் மோசமாக விளையாடிய நிலையிலும் மும்பையைச் சேர்ந்த வாசிம் ஜாபர் டெஸ்ட்அணியிலும் இடம் பெற்றுள்ளார்.
16 பேர் கொண்ட இந்திய அணி விவரம்:
ராகுல் டிராவிட் (கேப்டன்), வி.வி.எஸ். லட்சுமண் (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக்,வாசிம் ஜாபர், கெளதம் காம்பீர், மகேந்திர சிங் டோணி, திணேஷ் கார்த்திக், முனாப் பட்டேல், ஜாகிர் கான்,ஸ்ரீசாந்த், வி.ஆர்.வி.சிங், இர்பான் பதான், அணில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங்.
டிசம்பர் 15ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.ஒரு நாள் தொடரை தென் ஆப்பிரிக்கா வென்று விட்டது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications