கடலூர் சுனாமி பகுதியில் பில் கிளிண்டன்
கடலூர்:சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் தாழங்குடா மீனவர் கிராமத்திற்குஇன்று முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிடண் வருகை தந்தார். சுனாமியால்பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த குழந்தைகள சந்தித்து அவர் உரையாடினார்.
சுனாமி பேரலைகள் தாக்குதலில் சிக்கிய தமிழகத்தின் கடலூர் மற்றும் நிாகைமாவட்டங்கள் பெரும் உயிரிழப்பையும், பொருள் இழப்பையும் சந்தித்தன.சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு கிளிண்டன் வந்துபாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஐ.நா. சுனாமி மறுவாழ்வுக் குழுவின் தலைவராக கிளிண்டன் உள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தற்போது மீண்டும் இந்தியா வந்துள்ளார் கிளிண்டன். நேற்று டெல்லிவந்த அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியுடன் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றார்.
இன்று காலை சென்னை வந்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கடலூர் சென்றகிளிண்டனை மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடி, அமைச்சர்எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட தாழங்குடா மீனவர்கிராமத்திற்கு கிளண்டன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சுனாமியால்பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகளை கிளிண்டன் பார்வையிட்டார்.
பின்னர் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தங்கிப் படிக்கும் பள்ளிக்கு சென்றுஅவர்களை சந்தித்து நீண்ட நேரம் மகிழ்ச்சியுடன் உரையாடினார் கிளிண்டன். இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட கடலோரத்தில் 20 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளபேரிடர் எச்சரிக்கை கருவிகளை அவர் இயக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுனாமி நிவாரணப் பணிகளைதமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது. கடந்த முறை நான் வந்தபோது 30 சதவீதம்பேருக்கு மட்டுமே வீடு கிடைத்திருந்தது. இந்த முறை அனைவருக்கும்கிடைத்துள்ளது என்றார்.
சுனாமி நிவாரணப் பணிகள் செய்வதில் கடலூர் மாவட்டத்தை ஒரு மாடல் நிர்வாகமாக ஐ.நா. சபைஅறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications