தமிழ் வழக்கு மொழியாக நீதிபதிகள் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிமுகப்படுத்த சென்னைஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை ஆகியவற்றின் வழக்கு மொழியாகதமிழை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதிசமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, அனைத்துநீதிபதிகளையும் அழைத்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார். அப்போதுதமிழை ஆட்சிமொழியாக்கும் அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நீதிபதிகள்கூறினர்.
இந்தக் கருத்தை தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி முறைப்படி தெரிவித்துள்ளார்.அரசியல் சட்டத்தின் 348வது பிரிவின்படி பிராந்திய மொழிகளை உயர்நீதிமன்றத்தின்வழக்கு மொழியாக ஆக்குவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications