ஜனநாயகன் பிரச்சனைக்கு விஜய் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை? ஹெச் வினோத் சொன்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து ஏதாவது ஒரு காரணத்தால் பேசப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த படம் தான் விஜய்யின் கடைசி படம் என்று சொன்னதால் இந்த படத்தை பற்றி எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது. ஆனாலும் படத்தின் வெளியிட்டு தேதி, சென்சார் சர்டிபிகேட், இணையத்தில் லீக் ஆன காட்சி என தொடர்ந்து இந்த படம் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த படம் பல பிரச்சனைகளை சந்தித்து இருந்தாலும் இது குறித்து விஜய் எதுவும் பேசவில்லை என்ற கேள்வி எழுந்து வருகிறது. இது பற்றி இந்த படத்தின் இயக்குநர் வினோத் சொன்ன விளக்கம் பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

விஜய் பேசாத காரணம்

செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். வினோத்திடம் படம் லீக்கான போது கூட விஜய் ஏன் எந்த கருத்தையும் சொல்லவே இல்லையே என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொல்லும் பேசும்போது நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது இதற்காக ட்விட் போடுகிறாரே? என்று இன்னொரு விமர்சனம் வந்திருக்கும். அதனால் தான் அவர் எதுவும் பேசவில்லை. அதோடு அவருடைய படத்திற்கு அவர் குரல் கொடுத்தால் நல்லது என்று எல்லோரும் நினைத்தாலும் அவர் இது சட்டரீதியான பிரச்சனை அதற்கான நடவடிக்கையாக அமைதியாக எடுக்க வேண்டும் என்று நினைத்தார் என்று வினோத் கூறி இருக்கிறார்.

Jana nayagan Vijay H Vinoth Tamil Cinema

அதுபோல இந்த ஜனநாயகன் படம் வரும் 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னும் 2 நாட்கள் தான் இருப்பதால் டிக்கெட் புக்கிங் அதிர விட்டுக் கொண்டிருக்கிறது. சில இடங்களில் டிக்கெட் 2500 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் ரசிகர்கள் நாங்கள் விஜய்யின் கடைசி படத்தின் முதல் காட்சியை பார்த்து ஆக வேண்டும் என்று போட்டி போட்டு டிக்கெட்டை வாங்கி கொண்டு இருக்கிறார்கள்.

ஜனநாயகன் ரிலீஸ்

ஆனால் இந்த படத்தின் பயணம் எளிதானது அல்ல. போன வருடம் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகுவதாக சொல்லப்பட்டது. அதற்கு பிறகு சென்சார் பிரச்சனை காரணமாக தள்ளிப்போனது. அதைத் தொடர்ந்து பொங்கலுக்கு வருமா? என்று எதிர்பார்ப்புகள் இருந்தது ஆனாலும் அப்போதும் தள்ளி போய்விட்டது. பிறகு ஒவ்வொரு மாதமும் இந்த படம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று எதிர்பார்ப்பிலேயே ரசிகர்கள் காத்திருந்தனர். அதற்குள் படத்தின் சில காட்சிகள் சோசியல் மீடியாவில் லீக் ஆகிவிட்டது.

Jana nayagan Vijay H Vinoth Tamil Cinema

இந்த சம்பவம் கோலிவுட்டில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எது எப்படியோ ஒரு வழியாக இந்த படம் இப்போது தியேட்டரில் ரிலீஸ் ஆகும் நாளும் நெருங்கி விட்டது. இந்த நிலையில் தான் செய்தியாளர்களை சந்தித்து ஹெச் வினோத் பேசி இருக்கிறார். அப்போது அவரிடம் சென்சார் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது U/A சான்றிதழ் கிடைக்கும் என்று தான் எதிர்பார்த்தோம். ஆனால் A சர்டிபிகேட் தான் கிடைத்திருக்கிறது எங்களுக்கு வருத்தமாக இருந்தது.

உருக்கமான பேட்டி

ஆனால் அதை எதிர்த்து போராட நேரமில்லை. இந்த நேரத்தில் எங்களின் ஒரு நோக்கம் படத்தை வெளியிடுவது தான் என்று சொல்லி இருக்கிறார். அதோடு பல இயக்குநர்கள் கதைகள் சொன்ன நிலையிலும் விஜய் இந்த கதை எதற்காக தேர்வு செய்தார் என்ற கேள்விக்கும் வினோத் பதிலளித்திருக்கிறார்.

ஜனநாயகன் லீக் ஆனது எப்படி தெரியுமா? இத்தனை நாள் மௌனம் காத்த H. வினோத் உடைத்த சஸ்பென்ஸ்
அதில், பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசும் விஷயங்கள் இந்த கதையில் இருந்தது. அதுதான் விஜய்க்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் இந்த படத்தை அவர் தேர்வு செய்து இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார். அதோடு இந்த படத்திற்கு எதிராக நடந்த விஷயங்கள் எல்லாம் மக்களுக்கு தெரியும் என்று அவர் எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+