• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலங்கை மோதல்-100க்கும் மேற்பட்டோர் பலி

By Staff
|

கொழும்பு:மட்டக்களப்பு மற்றும் திரிகோணமாலை பிராந்தியத்தில் இலங்கை ராணுவம் நடத்தி வெறித் தாக்குதல் மற்றும்ராணுவம், புலிகள் இடையிலான மோதலில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். போர் உக்கிரமடைந்துள்ளதால்5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரை பிராந்தியத்தில், கடந்த 2 நாட்களாக ராணுவம் தாக்குதலைதீவிரப்படுத்தியுள்ளது. கந்தலடி, வாகரை, வெம்மிவெடுவான், பல்சேனை உள்ளிட்ட பகுதிகளிலும்திரிகோணமலையிலும் தாக்குதல் தீவிரமாகியுள்ளது.

ராணுவம் பீரங்கித் தாக்குதலில் ஈடுபட்டு அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. விமானம் மூலம்குண்டு வீசியும் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் முதலில் 40 பேர் இறந்தனர். இதில் 8 பேர் குழந்தைகள்ஆவர்.

விடுதலைப் புலிகள் திருப்பித் தாக்கியதில் 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர்காயமடைந்தனர்.

இந்த நிலையில் பல்சேனை, வெம்மிவெடுவான் பகுதிகளில் நடந்த மோதலில் தப்பி கந்தலடி அரசு பள்ளியில்தஞ்சம் புகுந்திருந்தவர்கள் விமானப்படை நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் 19 அப்பாவித் தமிழர்கள்உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறுகையில், இலங்கைகடற்படையின் தாக்குதல் படகுகளும் இந்தத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன.

பனிச்செங்கரேணி என்ற இடத்தில் புதிய பகுதியில் ஊடுறுவ கடற்படையும், ராணுவமும் முயன்றன. ஆனால்அதை விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டனர். வாகரை பகுதியில் உள்ள 5 தமிழ் அகள் முகாம்களை குறிவைத்து ராணுவமும், கடற்படையும் தாக்குதல் நடத்தியுள்ளன. இங்கு தங்கியிருந்தவர்கள் அங்கிருந்து உயிர் தப்பிவேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்றார்.

திரிகோணமலை மாவட்ட புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் எழிலன் கூறுகையில், வாகரையின்தெற்கே, பனிசெங்கரேணி என்ற இடத்தை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளைப் பிடிக்க ராணுவம் முயன்றது.ஆனால் அதை புலிகள் முறியடித்து விட்டனர்.

இந்த சண்டையின்போது இலங்கைத் தாக்குதலில் 19 அப்பாவிகள் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர்காயமடைந்தனர் என்றார்.

வாகரை பகுதியிலிருந்து 7000 அப்பாவித் தமிழர்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.இங்குள்ள மருத்துவமனை அருகே கந்தலடியில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

இதற்கிடையே, சனிக்கிழமை அகதிகள் முகாம் மீது நடந்த தாக்குதலில் படுகாயமடைந்து வாகரைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இங்குஅனுமதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட பெண்களை வெளிச்சேனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ராணுவம்அனுமதி தராததால் இவர்கள் அனைவரும் வசதிகள் இல்லாத வாகரை மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டனர்.

திரிகோணமலை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தாக்குதலை இலங்கை ராணுவம்மேற்கொண்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இப்பகுதியிலும் யாழ்ப்பாணத்தைப் போலவே பொருளாதாரத்தடையை அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் உள்ள 40,000 தமிழர்கள் பெரும் தவிப்புக்குஆளாகியுள்ளனர்.

பால்சேனை என்ற இடத்தில் நடந்த ராணுவத் தாக்குதலில் 13 பேர் காயமடைந்தனர். ஈச்சிலம்பட்டு என்றஇடத்திலிருந்து இந்தத் தாக்குதலை இலங்கை ராணுவம் நடத்தியது. வெருகல் பகுதியை புலிகளிடமிருந்து மீட்கும்முயற்சியாக இந்த தாக்குதலை இலங்கை ராணுவம் மேற்கொண்டது. ஆனால் புலிகள் இந்த முயற்சியைமுறியடித்தனர்.

ஈச்சிலம்பட்டு பகுதியில் புலிகளுக்கும், ராணுவவத்திற்கும் இடையே கடும் மோதல் நடந்தது.

ஆயிரக்கணக்கானோர் ஓட்டம்:

இதற்கிடையே, திரிகோணமலை மாவட்டதிதல் ராணுவத் தாக்குதல் அதிகரித்து வருவதையடுத்து அங்கிருந்துஆயிரக்கணக்கானோர் தப்பி வாகரை பகுதிக்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இதேபோல, ஈச்சிலம்பட்டு பகுதியைச் சுற்றிலும் வசிக்கும் நூற்றுக்கணக்கான தமிழ், சிங்கள, முஸ்லீம்கள்குடும்பம் குடும்பமாக புலிகள் மற்றும் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் புகுந்து தஞ்சமடைந்துவருகின்றனர். பால்சேனை, வெருகல் பகுதியில் மிகப் பெரிய மோதல் நடைபெறக் கூடிய வாய்ப்புகள்எழுந்துள்ளதால் இவர்கள் உயிர் தப்பி ஓடிக் கொண்டுள்ளனர்.

ஆனால் வாகரைப் பகுதிக்கு ஓடி வரும் தமிழர்களை தடுக்கும் முகமாக இலங்கை விமானப் படை குண்டு வீசித்தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

செஞ்சிலுவைச் சங்கத்தை அனுமதிக்க கோரிக்கை:

இதற்கிடையே இலங்கைத் தாக்குதலுக்கு ஆளான வாகரை பகுதியில், காயம் பட்டிருப்பவர்களை மீட்டு மருத்துவசிகிச்சை தர செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அனுமதி தர வேண்டும் என போர் நிறுத்தக் குழு, சர்வதேச சமுதாயம்,இலங்கை அரசுக்கு தமிழர் மறு சீரமைப்பு கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதாபிமான அடிப்படையில்காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க செஞ்சிலுவைச் சங்கத்தினரை வாகரைப் பகுதிக்கு இலங்கை அரசுஅனுமதிக்க போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும், சர்வதேச சமுதாயமும் வலியுறுத்த வேண்டும்.

வாகரை மருத்துவமனையையொட்டிய பகுதியில் மொத்தம் 30 குண்டுகள் விழுந்துள்ளன. 6 அகதிகள் முகாம்கள்தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. பலர் பலியாகியுள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

6 அகதிகள் முகாம்களும் பள்ளிக் கூடங்களாகும். இங்கு கிட்டத்தட்ட 45,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இங்கு தங்கியுள்ள 7500 பேர் தாக்குதலிலிருந்து தப்பிக்க வாகரை மருத்துவமனையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

வாகரை பகுதியில் தொடர்ந்து நிலம், வான் மற்றும் கடல் மார்க்கமாக இலங்கை பாதுகாப்புப படையினர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்களை மட்டக்களப்பில் அரசுத் தரப்பில் உள்ள பகுதிகளில்மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல ராணுவம் அனுமதி மறுக்கிறது.

காயம் பட்டவர்களை படகுகள் மூலம் கடல் மார்க்கமாக கொண்டு செல்ல முயன்றும் அது முடியவில்லை.

இந்த நிலையில், கீழ்க்கண்ட கோரிக்கைகளை இலங்கை அரசு பரிசீலிக்க வேண்டும். காயம் பட்டவர்களைசெஞ்சிலுவைச் சங்கத்தினர் மூலமாக மட்டக்களப்பு மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும், அகதிகள்முகாம்களை அமைதிப் பகுதிகளாக பாவித்து அங்கு தாக்குதல் நடத்தக் கூடாது, நடந்த சம்பவங்களை நேரில்பார்த்து ஆய்வு செய்ய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. ஆகியாரைஅனுமதிக்க வேண்டும், வாகரை முகாம்களில் தங்கியுள்ஏள 45,000 தமிழர்களுக்கும் உணவு, மருந்துஉள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.

கோழைத்தனமான தாக்குதல்:

வாகரையில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது என்று தமிழ்தேசிய கூட்டணி எம்.பி. ஜெயானந்த மூர்த்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 3 மாதமாகவாகரை பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. 40,000 தமிழர்களை குறி வைத்து தாக்குதலில் இறங்கியுள்ளதுஇலங்கை அரசு.

இந்த கொடும் தாக்குதலை நார்வே சமரசக் குழு, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் சர்வதேச சமுதாயம்ஒரே குரலில் கடுமையாக கண்டிக்க வேண்டும்.இந்த கொடும் தாக்குதலைக் கண்டு யாரும் மெளனமாக இருக்க முடியாது. காயம் பட்டவர்களை வெளிச்சேனை,மட்டக்களப்புக்கு கொண்டு செல்ல உரிய நடவடிககை எடுக்கப்பட வேண்டும்.

சிங்கபுரா, மகிந்தபுரா, சோமபுரா, கல்லாரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிங்கள மக்களை மட்டும் பாதுகாப்பானபகுதிக்கு கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் கடுமையாக காயம் பட்ட தமிழர்களைமருத்துவமனைக்கு அனுமதிக்க இலங்கை அரசு மறுப்பது மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற செயல்.

தமிழர்களை அழித்தொழிப்பது என்ற ஒரே கொள்கையுடன் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது என்று அவர்கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X