கருணாநிதிக்கு ராமதாசின் 6 கோரிக்கைகள்
சென்னை:கோட்டை முதல் தாசில்தார் அலுவலகம் வரை தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என கோரிதமிழகம் முழுவதும் வரும் 18ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பிரதமர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோரின் மதிப்பை பெற்ற தலைவராக முதல்வர் கருணாநிதி திகழ்கிறார்.இந்தியாவுக்கு வழிகாட்டும் முதுபெரும் தலைவராக கருணாநிதி இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதைபயன்படுத்தி முதல்வர் இந்திய அளவிலும், உலக அளவிலும் உள்ள 6 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
1. பிற்பட்டோர்களுக்கு ஒரே தவணையில் 27% இட ஓதுக்கீட்டை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
2. தனியார் துறை வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
3. கல்வியை மாநில அரசு பட்டியலில் கொண்டு வர வழிகாட்ட வேண்டும்.
4. தமிழ் உள்பட 18 மாநில மொழிகளையும் மத்தியில் ஆட்சி மொழியாக்க வேண்டும்.
5. நதிகளை இணைக்க வேண்டும்.
6. ஈழத்தமிழர் பிரச்சினையில் நிரத்தர தீர்வு காண வேண்டும்.
மேலும் கோட்டை முதல் தாசில்தார் அலுவலகம் வரை தமிழை ஆட்சி மொழியாக அமல்படுத்த வேண்டும். இதைவலியுறுத்தி மாநிலம் முழுவதும் 18ம் தேதி தொடர் முழுக்க போராட்டம் நடத்தப்படும்.
நதிகளை இணைப்பதற்கு இனியும் காலம் தாழத்தினால் காலம் நம்மை மன்னிக்காது என்று முதல்வர்கள்மாநாட்டில் முதல்வர் கருணாநிதி கூறியதை வரவேற்கிறேன். 2003ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 2015ம்ஆண்டுக்குள் நதிகளை இணைக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் நதிகளை இணைப்பதற்கு ஒரு குழுஅமைக்கப்பட்டது. 2004 வாஜ்பாய் அரசு பதவிக் காலம் முடிந்தது. முதல்வர் கருணாநிதி முயற்சி எடுத்துநதிகளை இணைப்பு செயலாக்க குழுவை உயிர்ப்பிக்க வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி பேசுவதற்கும், பதவியில் இருப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இதனால்முதல்வர் கருணாநிதியின் பதவிக்கு ஆபத்தும் இல்லை. கலைஞரின் 5 ஆண்டு கால ஆட்சி நீடிக்கும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications