சேது: தனுஷ்கோடியில் தோண்டும் பணி ஆரம்பம்
ராமேஸ்வரம்:சேது கால்வாய் திட்டத்தின் முக்கியப் பகுதியான பாக் ஜலசந்தியில் தனுஷ்கோடி முதல் கச்சத்தீவு வரையிலான 17கிலோமீட்டர் கடல் பகுதியை ஆழப்படுத்தும் பணி இன்று தொடங்கியது.
தமிழக மக்களின் நீண்ட நாள் கனவான சேது கால்வாய் திட்டதத்திற்கு கடந்த 2004ம் ஆண்டு மத்திய அரசுஒப்புதல் வழங்கியது. இதையடுத்து இத்திட்டம் அமலுக்கு வந்தது. திட்டத்தின் கீழ் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார்வளைகுடாவில் மொத்தம் 167 கிலோமீட்டர் நீளக் கால்வாய் வெட்டும் பணியை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது.
முதல் கட்டமாக கோடியக்கரையில், 54 கிலோமீட்டர் தூரக் கடல் பகுதியை ஆழப்படுத்தும் பணிமேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு இப்பணியை மதுரையில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மன்மோகன் சிங்தொடங்கி வைத்தார்.
கோடியக்கரை பணியில் 80 சதவீதம் முடிந்து விட்டது. தற்போது தனுஷ்கோடியிலிருந்து கச்சத்தீவு வரையிலான17 கிலோமீட்டர் தூர கடல் பகுதியை ஆழப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.
இதற்காக மண் அள்ளும் கப்பல்கள் 2ம், மிதவை மற்றும் இழுவைக் கப்பல்களும் தனுஷ்கோடிக்கு வந்துள்ளன.நேற்று காலை ராமர் பாலம் (ஆதாம் பாலம்) பகுதியில் மண் அள்ளும் பணியை அவை தொடங்கின. இன்றுகாலை மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, தனுஷ்கோடியில் மண் அள்ளும் பணியை தொடங்கிவைத்தார்.
மண்டபம் வந்த அவர் காலை 8 மணிக்கு கடலுக்குள் ஹோவர் கிராப்ட் படகு மூலம் சென்று இத்திட்டப் பணியைதொடங்கி வைத்தார். மணிக்கு 2200 கியூபிக் மீட்டர் அளவுக்கு இந்த நவீன கப்பல்கள் மண் அள்ளும் பணியில்ஈடுபடும்.
தமிழக துறைமுகங்களை மேம்படுத்த திட்டம்:
இதற்கிடையில் தேசிய கடல் சார் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 3 பெரிய துறைமுகங்களையும்ரூ. 13,284 கோடியில் மேப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள 12 பெரிய துறைமுகங்களில், தூத்துக்குடி துறைமுகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 12துறைமுகங்களையும் மேம்படுத்த தேசிய கடல்சார் வளர்ச்சி திட்டம் வகுப்பட்டு, மத்திய அமைச்சரவையின்ஒப்புதலுக்காக அனுப்பட்டுள்ளது.
இந்திய துறைமுகங்களில் சரக்குப் போக்குவரத்து ஆண்டுக்கு 10.44 சதம் அதிகரித்து வருகிறது. இதற்கானஅனைத்து துறைமுகங்களையும் மேம்படுத்த வேண்டியது அவசியம்.
தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் ஆகிய 3 துறைமுகங்களை மேம்படுத்த முதல் கட்டமாகரூ. 7,454 கோடியும், 2ம் கட்டமாக ரூ. 5,830 கோடியில் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்ட பணிகள் முடிவடையும் போது 3 துறைமுகங்களிலும் கூடுதலாக 74.45 மில்லியன் மெட்ரிக் டன்சரக்குகள் கையாளப்படும். தூத்துக்குடியில் மட்டும் 19.75 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கூடுதலாகக்கையாள முடியும்.
2ம் கட்ட பணிகள் முடிவடையும் போது 3 துறைமுகங்களிலும் கூடுதலாக 69.65 மில்லியன் மெட்ரிக் டன்சரக்குகள் கையாள முடியும். இப்பணிகள் அனைத்தும் 2012ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
துறைமுகங்களை மாணவர்கள் பார்க்க ஏற்பாடு:
சென்னை துறைமுகத்தின் 125வது ஆண்டு விழாவையொட்டி ஜனவரி 17ம் தேதி முதல் ஒருவாரம் தமிழ்நாட்டில்உள்ள 3 துறைமுகங்களையும் மாணவ, மாணவிகள் இலவசமாக பார்வையிட அனுமதி அளிக்கப்படும் எனவும்பாலு கூறினார்.
சென்னை துறைமுகத்தின் 125வது ஆண்டு விழா வரும் ஜனவரி மாதம் 17, 18, 19 ஆகிய மூன்று தினங்கள்நடைபெறுகிறது.
இவ்விழாவையொட்டி ஜனவரி 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை மாணவ, மாணவிகள் தமிழகத்தில் உள்ள 3துறைமுகங்களையும், கப்பல்களையும் இலவசமாக பார்வையிட அனுமதி அளிக்கப்படும். இதற்காக சென்னைதுறைமுகத்திற்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வர வழைக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications