கொட்டிய பாமாயில்-அள்ளிய பொது ஜனம்!
சென்னை:சென்னை அருகே ஓடும் லாரியிலிருந்து பாமாயில் கொட்டியதால் அவற்றை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு பிடித்து சென்றனர்.
சென்னை அருகே மணலியிலிருந்து கண்டெய்னர் லாரியில் பாமாயில் கொண்டு செல்லப்பட்டது. லாரி பாடி 200அடி சாலையில் சென்றபோது திடீரென லாரியிலிருந்து பாமாயில் கசியத் தொடங்கியது. இதனால் பின்னால் வந்தஇரு சக்கர வாகனங்களை ஓட்டிவந்தவர்கள் வண்டி ஓட்ட முடியாமல் நிலை தடுமாறினர்.
பின்னர் அவர்கள லாரியை ஒவர்டேக் செய்து போய் டிரைவரிடம் பாமாயில் கொட்டுவதாக தெரிவித்தனர்.இதையடுத்து டிரைவர் லாரியை பாடி சந்திப்பில் நிறுத்தினார்.
அப்போது லாரியிலிருந்து கொடகொடவென்று பாமாயில் கொட்டத் தொடங்கியது. இதைப் பார்த்த அப்பகுதிபொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்த குடம், வாளி, அண்டா உள்ளிட்ட கைக்குக் கிடைத்த பாத்திரங்களைஎடுத்து வந்து பாமாயிலைப் பிடிக்க ஆரம்பித்தனர்.
லாரியிலிருந்து கொட்டிய பாமாயிலைப் பிடிக்க கடும் போட்டியும் நிலவியது. பெரிய பெரிய அண்டாக்களையும்தூக்கி வந்து பொதுமக்கள் பாமாயில் பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
கிட்டத்தட்ட 1000 லிட்டர் பாமாயில் கொட்டியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும்போலீஸார் விரைந்து வந்து பாமாயில் பிடித்த பொதுமக்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். ஆனால்அவர்களிடம் சண்டை போட்ட பொதுமக்கள் போலீஸாரையும் மீறி பாமாயிலை பிடித்துச் சென்றனர்.
பின்னர் லாரி உரிமையாளர் விரைந்து வந்து பாமாயில் கசிவைத் தடுக்க நடவடிக்கை எடுத்தார். பின்னர் வேறுலாரி மூலம் மீதம் இருந்த பாமாயில் கொண்டு செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications