ஈழம்: அரசியல் தீர்வே சரியானது- பிரணாப்
டெல்லி:இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வே சரியானது என்ற கருத்தில் இந்தியா உறுதியாகஉள்ளது என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
மக்களவையில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வே சரியானது. அனைத்துப் பிரிவினருக்கும் சம்மதம் தரக் கூடிய ஒருஅமைதித் தீர்வு எட்டப்பட வேண்டும்.
போர் நிறுத்தத்தை உறுதியாக கடைப்பிடிக்குமாறும், முடங்கியுள்ள அமைதி முயற்சிகளை மீண்டும் தொடங்குமாறும் இலங்கைஅரசை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்துநடந்து வரும் சண்டையில் பல உயிர்கள் பலியாகியுள்ளன என்றார்.
வாகரை படுகொலை: ஐ.நா. கண்டனம்
கிழக்கு இலங்கையில் உள்ள வாகரையில், இலங்கை படையினரின் கொலை வெறித் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. சபைகண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழர்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை பாதுகாப்புப் படையினர் சமீபத்தில் வாகரை பகுதியில் கடும் தாக்குதலை நடத்தினர். கடற்படை,விமானப்படை மற்றும் ராணுவம் இணைந்து நடத்திய இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியாயினர்.
இந்த படுகொலைச் சம்பவத்திற்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலக தலைமை அதிகாரிஅமீன் ஆவாத் கூறுகையில், ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்து வரும் சண்டையில் 35,000க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள்சிக்கித் தவித்து வருகின்றனர்.
வாகரையில் நடந்த தாக்குதலில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மக்கள் வசித்து வரும் பள்ளிக்கூடங்களைக் கூடபாதுகாப்புப் படையினர் தாக்கியுள்ளது வருத்தம் தருகிறது.
திரிகோணமலை மாவட்டத்தில், 2500க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். பலர்கந்தாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.
பொதுமக்களைக் குறி வைத்து ராணுவம் தாக்குதல் நடத்துவது கவலை தருகிறது, அதிர்ச்சி தருகிறது. திரிகோணமலைப் பகுதி கிராமங்கள் மற்றும்வாகரையில் வாழும் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பற்ற நிலையில் மக்கள் வாழும் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது ஒரு அரசின் கடமை. இப்போது அது அவசரமாக தேவைப்படுகிறது.
காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல அரசுத் தரப்பு நடவடிக்கை டுக்க வேண்டும் என்றார்
அமீன்.கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணுவம் நடத்திய தாக்குதலில் 41 அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே, இந்திய கள்ள ரூபாய் நோட்டுக்களை இலங்கையில் புழக்கத்தில் விட்ட 6 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். அவர்களில் ஒருவர் இந்தியாவைச்சேர்ந்தவர். 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் இந்த கள்ளப் பணத்தில் அடங்கும்.
பிடிபட்டவர்களிடமிருந்து 16,000 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களையும், 21,400, ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுக்களையும் போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர்.
இந்தியா தலையிட தமிழ் எம்பி கோரிக்கை:
இந் நிலையில் சென்னை வந்துள்ள இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிசிவாஜிலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் நிலைமைமோசமடைந்து வருகிறது. அங்கு தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. அப்பாவித்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர்.
எம்பிக்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. சமீப காலத்தில் ஜோசப்பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகிய தமிழ் எம்பிக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் சாலையை திறக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. இதனால் மருந்து,உணவு, அத்தியாவசியப் பொருட்கள் யாழ்ப்பாணத்திற்கு கிடைக்காத நிலைநிலவுகிறது.
எனவே இரு தரப்பினருக்கும் இடையே முடங்கிப் போயுள்ள அமைதிப்பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர இந்தியா விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதொடர்பாக ராஜதந்திர ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்தியாநடவடிக்கை எடுத்து இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்றார் சிவாஜிலிங்கம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications