விண்ணில் நடந்தார் சுனிதா வில்லியம்ஸ்
ஹூஸ்டன்:விண்வெளிக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளிப் பெண் விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் இன்று விண்ணில்நடந்தார்.
அமெரிக்காவின் டிஸ்கவரி விண்வெளி ஓடம் மூலம் சமீபத்தில் 7 விண்வெளி வீரர், வீராங்கனைகள்விண்வெளிக்குச் சென்றனர். 12 நாள் பயணமாக விண்ணுக்குச் சென்றுள்ள இந்த குழு, விண்வெளியில் உள்ளசர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அடைந்துள்ளனர்.
அங்கு சில கோளாறுகளை சரி செய்யும் பணியில் இந்தக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக விண்வெளியில்3 முறை நடந்து பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த வேலை வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் 4வது முறையாக விண்வெளி நடையில் வீரர், வீராங்கனைகள் ஈடுபட்டனர். ராபர்ட் கர்பீம்மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளியில் இன்று நடந்து சோலார் தகட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலைசரி செய்யும் பணியை மேற்கொண்டனர்.
முதலில் ராபர்ட் கர்பீம், சர்வதேச ஆய்வு நிலையத்திலிருந்து வெளியேறி விண்ணில் நடந்தார். அடுத்த சிலநிமிடங்களில் சுனிதா வில்லியம்ஸ் விண்ணில் நடந்தார்.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.45 மணிக்கு இந்த விண்வெளி நடை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 110 அடிநீளமுள்ள இந்த சோலார் தகடு தானாக மடங்கக் கூடியது.
ஆனால் சோலார் தகடு தானாக மடங்காததால், அதை சரி செய்யும் பணியில் 3 முறை விண்வெளி வீரர்கள்முயன்றனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. இதையடுத்து இன்று 4வது முறையாக இம்முயற்சிமேற்கொள்ளப்பட்டது.
கர்பீம் விண்ணில் நடப்பது இது 6வது முறையாகும். சுனிதாவுக்கு இதுவே முதல் முறையாகும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications