சென்னைக்கு மேலும் 6 மின்சார ரயில்கள்-வேலு
சென்னை:சென்னை புறநகர்களில் புதிதாக 6 மின்சார ரயில்கள் விடப்படும் என ரயில்வே துறை இணையமைச்சர் வேலுகூறினார்.
சென்னை தாம்பரம் ரயில்வே பணிமனையின் 75வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட வேலு பின்னர்நிருபர்களிடம் கூறியதாவது,
சென்னை புறநகர் பகுதிகளில் 24 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினசரி 5 லட்சம் பேர்பயணம் செய்கின்றனர். இதை 7 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக மேலும் 6 புதிய ரயில்கள் விடதிட்டமிட்டுள்ளோம்.
மின்சார ரயில்களில் 9 பெட்டிகள் உள்ளன. அதை 12 பெட்டிகளாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மும்பையில் மின்சார ரயில்களில் தினமும் 60 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். சென்னையில் 5லட்சம் பேர் மட்டுமே பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.
இங்கு ரயில் நிலையத்தில் பயணிகள் ஏறி, இறங்கும் வேகம் குறைவாக இருப்பதால் அதிக பயணிகள் பயணம்செய்ய முடியவில்லை. 2005ல் தென்னக ரயில்வேக்கு பயணிகள் போக்குவரத்து மூலம் ரூ. 891 கோடிவருமானம் கிடைத்தது. 2006ல் இது ரூ. 1050 கோடியாக அதிகரித்துள்ளது.
சரக்கு மூலம் 2005ல் ரூ. 650 கோடி வருமானம் கிடைத்தது. 2006ல் ரூ. 710 கோடியாக அதிகரித்துள்ளது. வரும்5ம் தேதி திருச்சி-புதுக்கோட்டை இடையேயும், 28ம் தேதி தஞ்சை-திருவாரூர் இடையேயும் புதிய ரயில்கள்விடப்படும்.
சென்னை வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டம் மழையால் தாமதமானது. இது அடுத்த ஆண்டு மார்ச் மாத்துக்குள்முடிவடைந்து விடும். மேலும் தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதலாக இரண்டு டிக்கெட் கவுண்டர்களும்திறக்கப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications
