மதுரை-கார் விபத்தில் மே.வங்க ஐஜி மகள் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மேற்கு வங்க மாநிலத்தின் உளவுப் பிரிவு ஐஜியின் மகளும் டிரைவரும்பலியாயினர். ஐஜியும் அவரது மனைவியும் படுகாயமடைந்து மருத்துமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமங்கலத்தில் இருந்து விருதுநகருக்கு சென்று கொண்டிருந்த டவுன் பஸ்சும்கன்னியாகுமரியில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த டாக்சியும்கள்ளிக்குடி-சிவரக்கோட்டை இடையே நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் காரில் பயணம் செய்த மேற்கு வங்க உளவுத் துறை ஐ.ஜி. சதர்ன் சந்துருமண்டல் மற்றும் அவரது மனைவி படுகாயமடைந்தனர்.
மண்டலின் மகள் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த டிரைவர் அலிமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் பலியானார்.
காயமடைந்த மண்டலும் அவரது மனைவியும் தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications