பிசினஸ்-மனைவியை விருந்தாக்கிய தொழிலதிபர்
சென்னை:பிசினசுக்காக அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு தன்னை இரையாக்கிய கணவரைவிட்டுப் பிரிந்துள்ளார் மனைவி.
சென்னை முகப்பேரில் உள்ள சங்ககிரி அபார்ட்மென்ட்டில் வசித்து வருபவர் மோகன்.இவர் அம்பத்தூர் எஸ்டேட்டில் கியர்களுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் நிறுவனம்வைத்துள்ளார். இவரது மனைவி உஷா (வயது 38).
கணவரின் நிறுவனத்தைக் கவனித்துக் கொண்ட உஷா, பாரிமுனையில் உள்ள ஒருநிறுவனத்தில் கணக்காளராகவும் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் திடீரென மோகன் ஜெ.ஜெ. நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார்கொடுத்தார்.
அதில், கோவையைச் சேர்ந்த கிரைண்டர் தயாரிப்பு நிறுவன உரிமையாளரானதேவராஜன் எனது மனைவி உஷாவை கடத்திச் சென்று விட்டார். மனைவியைஒப்படைக்க வேண்டும் என்றால் ரூ. 50 லட்சம் பணம் தர வேண்டும் என்றுமிரட்டுகிறார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து கோவை சென்ற போலீஸார் தேவராஜனிடம் விசாரணை நடத்தினர்.அப்போது உஷாவும் தேவராஜனுடன் இருந்தார்.
இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் உஷாவிடம் விசாரணைநடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. போலீசாரிடம் உஷாகூறியதாவது:
17 ஆண்டுகளுக்கு முன் எங்களுக்குத் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு மகன்,மகள் உள்ளனர். மகன் பி.இ. படிக்கிறான்.
தனது தொழிலுக்காக என்னை மனைவி என்றும் பாராமல் தவறாக பயன்படுத்தினார்மோகன். மின்வாரிய காண்டிராக்டைப் பெறுவதற்காக என்னை பலமுறை மின்வாரியஅதிகாரிகளிடம் உல்லாமாக இருக்க அனுப்பி வைத்தார்.
அதேபோல தனது நண்பர்களிடம் என்னை ஜாலியாக இருக்கச் சொல்லி அனுப்பிவைப்பார். அடிக்கடி வெளியே கூட்டிச் செல்வார். ஹோட்டல்களில் அறை போட்டுஅவரது நண்பர்களுக்கு என்னை விருந்தாக்குவார்.
கணவராக நடந்து கொள்ளாத அவரால் நான் மிகுந்த சித்திரவதைக்கு உள்ளானேன்.அவருடன் வாழப் பிடிக்கவில்லை. இந் நிலையில்தான் என் கணவர் மோகன் மூலமாகதேவராஜன் அறிமுகமானார். பிசினஸ் தொடர்பாக அடிக்கடி பணம் வாங்குவதற்காகஎனது வீட்டுக்கு வருவார் தேவராஜன். அப்போது அவருடன் நட்பு ஏற்பட்டது.
அவரிடம் எனது கஷ்டங்களை சொல்லி அழுதேன். அவர் மிகவும் நல்லவர். என்னைப்புரிந்து கொண்டார். எனக்கும் அவரைப் பிடித்திருந்தது. இதனால் மோகனின் பாலியல்சித்திரவதையிலிருந்து விடுபட்டு தேவராஜனுடன் சென்று விட்டேன்.
மோகனுடன் இனி வாழ விருப்பம் இல்லை. அவருக்கு ஆதரவாக இப்போது காவல்நிலையத்திற்கு வந்து குரல் கொடுத்த அரசியல் பிரமுகர்கள் பலருக்கும் என்னை அவர்விருந்தாக்கியுள்ளார் (காவல் நிலையத்திற்கு மோகனுக்கு ஆதரவாக பல அரசியல்பிரமுகர்கள் வந்து தேவராஜனைக் கைது செய்யுமாறு கோரி கோஷமிட்டனர்)
இப்போதும் கூட அவர்கள் மோகனுக்காக வரவில்லை. என்னை மறுபடியும்மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வந்துள்ளனர். எனதுகுழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல விஷயங்களைவெளிப்படுத்தாமல் உள்ளேன்.
இப்போதும் கூட தேவராஜன் ரூ. 50 லட்சம் பணம் கொடுத்தால் என்னை அழைத்துச்செல்லலாம் என மோகன் கூறுகிறார். அவருக்கு நான் முக்கியமில்லை, பணம்தான்முக்கியம். என்னை மறுபடியும் அவருடன் அனுப்பினால் நான் நிச்சயம் தற்கொலைசெய்து கொள்வேன் என்று போலீசாரிடம் உஷா கூறினார்.
இது குறித்து தேவராஜன் போலீசாரிடம் கூறுகையில், உஷா விரும்பியதால்தான் நான்அவரை அழைத்துச் சென்றேன். கோவையில் அவருக்கு நல்ல வேலையும் வாங்கிக்கொடுத்துள்ளேன். அவர் கண்டிப்பாக என்னுடன் வர வேண்டும் என பிடிவாதம்பிடிக்கவில்லை. உஷாவே முடிவெடுக்கட்டும் என்றார்.
இந்த விசாரணையைத் தொடர்ந்து துணை அணையர் பாலசுப்ரமணியத்திடம் உஷா,தேவராஜன் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு உஷாவிடம் துணை ஆணையரும்விசாரணை நடத்தினார். அப்போதும் தனது கணவருடன் சேர்ந்து வாழவிரும்பவில்லை என்று உஷா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இதையடுத்து தண்டையார்பேட்டையில் உள்ள தாயாரின் வீட்டுக்கு உஷாவைஅனுப்பி வைத்த போலீசார் தொடர்ந்து தேவராஜனிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications