பிறந்தது 2007: உலகெங்கும் உற்சாக கொண்டாட்டம்
சென்னை:2007ம் ஆண்டு பிறந்ததை உலகெங்கும் உள்ள மக்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாட்டங்களில்ஈடுபட்டனர்.
இந்தியாவில் புத்தாண்டை அனைத்துப் பகுதியிலும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். நேற்றுமாலை முதலே புத்தாண்ட வரவேற்க கொண்டாட்டங்களில் குதித்தது இந்தியா.
கோவில்கள், சர்ச்சுகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்கள்,ரிசார்ட்டுகள், கடற்கரை மணல் வெளிகள், அடுக்குமாடிக் குடியிருப்பு மாடிகள், குடியிருப்பு வளாக மைதானங்கள்என அத்தனை இடங்களிலும் புத்தாண்டை வரவேற்க மக்கள் அலை திரண்டிருந்தனர்.புத்தாண்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளேபரப்பட்டன. ஆட்டமும், பாட்டமும் கரைபுரண்டன.
நள்ளிரவு 12 மணி ஆனதும் கொண்டாட்டம் உச்சத்தை எட்டியது. அத்தைன பேரும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்தும், முத்தம் கொடுத்தும், உற்சாகத்தில் கூக்குரல் எழுப்பியும் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
தெருக்களிலும், சாலைகளிலும் பட்டாசுகள் சரமாரியாக வெடிக்கப்பட்டன.
சென்னையில் மெரீனா கடற்கரையில் கடல் அலைகளுக்குப் போட்டியாக மக்கள் கூட்டம் அலைமோதியது.ஆயிரக்கணக்கானோர் கூடி புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் போவோர் வருவோருக்குகைகுலுக்கியும், இனிப்புகள் வழங்கியும் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. இதேபோல அடுக்குமாடிக் குடியிருப்புகள், கிளப்கள், ரிசார்ட்டுகள் என அனைத்து இடங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.
கோவில்கள், சர்ச்சுகளிலும் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வட பழனிமுருகன் கோவிலில் நள்ளிரவில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனைத் தரிசித்துபுத்தாண்டை வரவேற்றனர்.
இதேபோல நகரில் உள்ள பல்வேறு முக்கியக் கோவில்களிலும் நள்ளிரவு பூஜை நடந்தது. நகரில் உள்ளஅனைத்து சர்ச்சிகளிலும் நள்ளிரவு சிறப்பு ஜெபம் நடந்தது.
புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு ஏற்கனவே காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்திருந்ததால்உற்சாகம் எல்லை மீறாத வகையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பார்த்துக் கொண்டனர்.
நட்சத்திர ஹோட்டல்களில் இரவு 2 மணி வரை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்திற்கு காவல்துறை அனுமதிஅளித்திருந்தது. அங்கு ஏடாகூடமான ஆட்டங்கள் நடைபெறுகிறதா என்பதை காவல்துறையினர் சென்றுகண்காணித்தனர்.
நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதேபோல இந்தியாவின் பிற பகுதிகள், உலகின் பல்வேறு நாடுகளிலும் 2007ம் ஆண்டு உற்சாகத்துடன்பிறந்தது.
பக்ரீத்: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
இந்நிலையில் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஈத் உல் சுஹா எனப்படும் பக்ரீத் பண்டிகை இன்று இந்தியா முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
முஸ்லீம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களையும்,இனிப்புகள் மற்றும் சிறப்பு உணவுகளையும் பரிமாறிக் கொண்டனர்.
சென்னையில் தீவுத் திடலில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கூடி தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோலதமிழகத்தின் பிற பகுதிகளிலும் பக்ரீத் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications