இலங்கை விமான தாக்குதலில் 15 தமிழர்கள் பலி
மன்னார்:இலங்கையின் மன்னார் பிராந்தியத்தில் விமானப்படை நடத்திய தாக்குதலில் 15 அப்பாவித் தமிழர்கள்கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
![]() |
மன்னார் அருகே உள்ள படகுத்துறை மற்றும் இலுப்பைக்கடவய் ஆகிய பகுதிகளில் விமானப்படை விமானங்கள்செவ்வாய்க்கிழமை காலை குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.
![]() |
இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 15 அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர்குழந்தைகள். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை மன்னார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல விடாமல் இலங்கை ராணுவம் தடுத்ததால்,காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சைய தருவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களில் பலர்கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
![]() |
இந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 30 வீடுகளில் 5 வீடுகள் மட்டுமே சேதத்திலிருந்து தப்பிப் பிழைத்துள்ளன.மற்ற வீடுகள் அனைத்தும் சேதமடைந்து விட்டன.
தமிழர்களுக்கு அடையாள அட்டை:
இதற்கிடையே வட கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணியில் விடுதலைப்புலிகள் இறங்கியுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் சிவில் நிர்வாகப் பிரிவு இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பணியை தமிழ்ஈழ ஆள் பதிவுத் துறையின் ஆணையரான ஜெயேந்திரன் தொடங்கி வைத்தார்.
முதல் அடையாள அட்டையை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பெற்றுக் கொண்டார்.மேற்கத்திய நாடுகளில் வழங்கப்படும் சமூக பாதுகாப்பு எண்ணைப் போலவே இந்த தேசிய அடையாளஅட்யையும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெயேந்திரன் கூறுகையில், தமிழ் ஈழத்தில் வாழும் ஒவ்வொரு தமிழரும் இனி கணக்கில் வந்துவிடுவார்கள். இந்தப் பதிவை நாங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்துள்ளோம்.
வரி ஆவணங்கள், வேலை வாய்ப்பு, நோயாளிகள், மாணவர்கள், கடன் ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்திலும்இனிமேல் தேசிய அடையாள அட்டையில் இடம்பெற்றுள்ள எண்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
நிர்வாக வசதிக்காக மட்டுமல்லாது, தமிழர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்றநோக்கிலும் தேசிய அடையாள அட்டையை விடுதலைப் புலிகள் விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர்.
வட கிழக்கு மாகாணங்கள் இன்று முதல் பிரிப்பு:
இதற்கிடையே இலங்கை உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், வட கிழக்கு மாகாணங்கள் தனியாகபிரிக்கப்பட்டு இன்று முதல் தனித் தனி மாநிலங்களாக செயல்படத் தொடங்கியுள்ளன.
இதுதொடர்பான உத்தரவை ஏற்கனவே இலங்கை அரசு பிறப்பித்திருந்தது. இன்று முதல் இரு மாநிலங்களும்தனித் தனியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி பிரதமராகவும், ஜெயவர்த்தனே இலங்கை அதிபராகவும் இருந்தபோது இந்தியாவுக்கும்,இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இரு மாநிலங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே மாநிலமாக செயல்படத் தொடங்கியது. ஆனால் சிலமாதங்களுக்கு முன்பு இந்த மாநில இணைப்புக்கு இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து இரு மாநிலங்களையும் மீண்டும் பிரிக்க இலங்கை அரசு முடிவு செய்தது. ஆனால் இந்தப்பிரிவினைக்கு தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் நிலவுகிறது. தமிழர் கட்சிகளும் கடும்ஆட்சேபனை தெரிவித்துள்ளன.
ஆனால் அந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இன்று முதல் இரு மாநிலங்களும் தனித் தனியாக செயல்படும் எனஇலங்கை அரசு அறிவித்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?















Click it and Unblock the Notifications