இயற்கை காரில் சென்னை வந்த ஜெர்மன் குழு
சென்னை:இயற்கை எரிவாயுவை மாற்று எரிபொருளாக பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் குறித்து பிரசாரப் பயணம்மேற்கொண்டுள்ள ஜெர்மனி நாட்டுக் குழு சென்னைக்கு வந்துள்ளது.
![]() |
இந்தக் குழுவினர் இயற்கை எரிவாயுவைக் கொண்டு இயங்கும் வோல்க்ஸ்வேகன் கேட்டி காரில் உலகம்முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். பெட்ரோல், டீசலுக்குப் பதில் இயற்கை எரிவாயுவைக் கொண்டுவாகனங்களை இயக்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தப் பிரசாரம்.
தங்களது பயணம் குறித்து குழுத் தலைவரான ரெய்னர் ஸீட்லோ கூறுகையில், ஹானோவர் நகரில் அக்டோபர்23ம் தேதி எங்களது பயணத்தைத் தொடங்கினோம். மாற்று எரிபொருளின் நன்மைகள் குறித்து நாங்கள் பிரசாரம்செய்கிறோம்.
உலகம் முழுவதும் மிகவும் எளிதாகக் கிடைக்கக் கூடிய இந்த மாற்று எரிபொருள் தொழில்நுட்பம்சுற்றுச்சூழலுக்கும் நன்மை தரக் கூடியது என்பதை விளக்குகிறோம்.
ஐந்து கண்டங்களிலும் மொத்தம் 45,000 கிலோமீட்டர் தூரம் சுற்றுப்பயணம் செய்துள்ளோம். இதை கின்னஸ்சாதனைக்காகவும் செய்கிறோம்.
![]() |
மொத்தம் 40 நாடுகளைச் சேர்ந்த 75 நகரங்களுக்கு நாங்கள் செல்கிறோம். எங்களது வாகனத்திற்குத் தேவையானஇயற்கை எரிவாயுவை நாங்கள் செல்லும் நகரங்களில் உள்ள 32 இயற்கை எரிவாயு மையங்களில் நிரப்பிக்கொள்கிறோம்.
ஒவ்வொரு கிலோமீட்டரைக் கடந்தவுடனும் 10 சென்ட் பணத்தை எடுத்து வைக்கிறோம். இப்படிச் சேரும்பணத்தை நேபாளத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கவுள்ளோம் என்றார் அவர்.
இந்தக் குழுவில் மொத்தம் நான்கு பேர் உள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் காரில் 13 லிட்டர் எரிபொருளைநிரப்பலாம். இதை இயற்கை எரிவாயுவை நிரப்பிக் கொள்வதற்கேற்ற வகையில் மாற்றியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications