தவறான சிகிச்சையால் பள்ளி மாணவி பலி
கோவை:கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்தால் பள்ளி மாணவி உயிரிழந்தார்.
கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் மணியன். இவரது மகள் கவிப்பிரியா (13). இவர் 9ம் வகுப்பு படித்துவந்தார். காய்ச்சல் வந்ததால், கவிப்பிரியாவை கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதித்தனர்.
அங்கு கவிப்பிரியாவுக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டு, ஊசி போடப்பட்டது. இதையடுத்து கவிப்பிரியா மயக்கம்அடைந்தார். அப்போது மருத்துவமனை ஊழியர் ஒருவர் கவிப்பிரியாவுக்கு தூக்க ஊசி போடப்பட்டுள்ளது.வீட்டுக்கு கொண்டு சென்று தூங்க வையுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கவிப்பிரியாவை வீட்டுக்குக் கொண்டு சென்றனர். அங்கு நீண்ட நேரமாகியும் கவிப்பிரியாஎழுந்திருக்கவில்லை. மேலும் அவரது வாயிலிருந்து நுரை தள்ளியுள்ளது, உடலும் நீலம் பாரித்துள்ளது.
பயந்து போன அவரது பெற்றோர் இன்னொரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குகவிப்பிரியாவை பரிசோதித்த டாக்டர்கள், கவிப்பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த மணியன் போலீஸில் புகார் கொடுத்தார். போலீசார் கவிப்பிரியாவின் உடலை பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அணுப்பி வைத்தனர்.
நேற்று காலை 11 மணியளவில் கவிப்பிரியாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.மருத்துவமனையில் திரண்ட அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் கபிப்பிரியாவின் உடலை வாங்கமறுத்து விட்டனர். கவிப்பிரியாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம். மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லமாட்டோம் எனக் கூறி மறியல் செய்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர். இதனால் வருவாய் கோட்டாட்சியர் தனியார்மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களிடம் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவார்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் டாக்டர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் கவிப்பிரியாவின் உடலை வாங்கி சென்றனர்.
குறைந்த நேரத்தில் அதிக அளவிலான குளுக்கோஸ் ஏற்றியதால்தான் கவிப்பிரியா இறந்து விட்டதாககூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications