மனைவியை துடுப்பால் அடித்துக் கொன்ற கணவன்
ஈரோடு:ஈரோடு மாவட்டம் பவானி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரை படகில்அழைத்துச் சென்று நடு ஆற்றில் வைத்து துடுப்பால் அடித்துக் கொலை செய்தார். பிறந்து 6 மாதமே ஆனகுழந்தையையும் தாயின் பிணத்தோடு சேர்த்து கட்டி ஆற்றில் போட்டுக் கொலை செய்தார்.
அம்மாப்பேட்டை சின்னப்பள்ளம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சின்னப்பன். இவர் ஒரு மீனவர். இவரது மனைவிகுளோரியா மேரி. இவர்களுக்கு ஜெனீபர் நித்யா, கில்பர்ட் செல்வா, அருண் சேட், ஆண்டனி ஆகிய குழந்தைகள்உள்ளன. ஆண்டனி பிறந்து 6 மாதம்தான் ஆகிறது.
குளோரியா நடத்தை குறித்து சின்னப்பனுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையேஅடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சில நாட்களாக குளோரியாவையும், ஆண்டனியுயம் சிலநாட்களாக காணவில்லை. அவர்களைத் தேடி வந்தார் சின்னப்பன்.
இந்த நிலையில் நெஞ்சிப்பேட்டை அருகே காவரி ஆற்றில் பாறாங்கல் கட்டப்பட்ட நிலையில் குளோரியா மற்றும்குழந்தையின் பிணங்கள் கரை ஒதுங்கின.
இதுகுறித்து சின்னப்பனைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்தான்குளோரியாவையும், குழந்தையையும் கொன்றது தெரிய வந்தது.
இதுகுறித்து சின்னப்பன் கூறுகையில், எனது மனைவிக்கு பலருடன் கள்ளக் காதல் இருந்தது. நான் கண்டித்தும்அவர் கேட்கவில்லை. இதனால் அவரைக் கொலை செய்ய திட்டமிட்டேன்.
புதன்கிழமை இரவு எனது பரிசலில் ஒரு பெரிய பாறாங்கல், மற்றும் கயிறு ஆகியவற்றை போட்டு விட்டுவீட்டுக்கு வந்தேன். அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு குளோரியாவை எழுப்பி மீன் பிடிக்கக் கூப்பிட்டேன்.
முதலில் வர மறுத்த அவர் பின்னர் ஆண்டனியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.கிளம்பும்போது என்னை எனது உறவினர் வீட்டில் விட்டு விடுங்கள் என்று கூறினாள். சரி என்று கூறிய நான்பரிசலில் அழைத்துச் சென்றேன்.
ஆற்றின் நடுவில் சென்றபோது துடுப்பால் ஓங்கி பலமாக அடித்தேன். இதில் நிலைகுலைந்த அவள் படகிலேயேமயங்கி விழுந்தாள். அப்போது குழந்தை ஆண்டனி தூங்கிக் கொண்டிருந்தான். அவன் யாருக்குப் பிறந்தானோஎன்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இதையடுத்து எனது மனைவியின் சேலையோடு சேர்த்து தூங்கிக் கொண்டிருந்த ஆண்டனியைக் கட்டினேன்.பின்னர் அவர்களது உடலில் பாறாங்கல்லைக் கட்டி ஆற்றில் தூக்கிப் போட்டேன். பின்னர் வீடு திரும்பி விட்டேன்என்று தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார் சின்னப்பன்.
சின்னப்பனைக் கைது செய்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications