திடீரென கருணாநிதியை சந்தித்த ராமதாஸ்
சென்னை:நீண்ட நாட்களுக்குப் பின் முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே திமுக, பாமக இடையே உரசல் உருவானது. உள்ளாட்சித்தேர்தலின்போது அது வெடித்தது. அந்தத் தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்தும் பாமகவினரை திமுகவினரேதோற்கடித்ததாகவும் புகார்களை அடுக்கினார் ராமதாஸ்.
![]() |
இதையடுத்து அரசுக்கு நெருக்கடி தரும் நடவடிக்கைகளிலும் இறங்கினார். சிறப்பு பொருளாதார மண்டலங்கள்அமைப்பது, சென்னையின் துணை நகரத்தை அமைப்பது ஆகிய திட்டங்களை எதிர்த்த ராமதாஸ் அரசுக்குஎதிராக பாமகவினரை விட்டு போராட்டமும் நடத்தினார்
மேலும் அரசுக்கு 5 கோரிக்கைள், 3 கோரிக்கைகள் என பத்திரிக்கைகள் மூலம் கோரிக்கைகளை வைக்கஆரம்பித்தார். முதல்வர் கலந்து கொண்ட விழாக்களில் பங்கேற்றாலும் கருணாநிதியுடன் பேசாமலேயே கிளம்பிச்சென்றார்.
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு தரும் விஷயத்தில் மத்திய அரசைகருணாநிதி நெருக்கவில்லை என்று குற்றம் சாட்டினார் ராமதாஸ். சட்டசபையிலும் திமுகவைகு பாமககேள்விகளால் துளைத்தது.
இதனால் அடுத்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற ராமதாஸ் இப்போதே தயாராகி வருவதாக யூகம்எழுந்தது.
இந் நிலையில் திடீரென கோபாலபுரம் வந்த ராமதாஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்துவழங்கினார். அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது முன்னாள் எம்பி மூர்த்தியும் உடனிருந்தார்.
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
புத்தாண்டையொட்டி முதல்வரை சந்தித்து வாழ்த்து சொன்னேன். இது நல்ல சந்திப்பாக அமைந்தது. இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த கோரிக்கை விடுத்தேன். இலங்கை தமிழர் நலன், முல்லைப் பெரியாறுகுறித்தும் பேசினேன்.
இனிமேல் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்துடன் பேச்சே கிடையாது என முதல்வர் என்னிடம்உறுதியளித்தார் என்றார் ராமதாஸ்.
வழக்கமாக ஆங்கில புத்தாண்டை ராமதாஸ் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந் நிலையில் அதை சாக்காகவைத்து கருணாநிதியை திடீரென அவர் சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications