கேரளத்தின் சதி: பிரதமரிடம் வைகோ புகார்
சென்னை:முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படையை அனுப்ப வேண்டும் என்று பிரதமர்மன்மோகன் சிங்கிற்க்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை வந்துள்ள பிரதம்ர மன்மேகான் சிங்கை மதிமுக எம்பிக்கள் கிருஷ்ணன், சிப்பிபாறை ரவிசந்திரன்ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் சந்தித்தனர். அப்போது அவர்கள் பிரதமரிடம் வைகோ எழுதியகடிதத்தை கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது,
கேரள மாநிலத்தில் உள்ள தேச விரோத சக்திகள், முல்லைப்பெரியாறு அணையில் சுற்றுச்சுவரில் ஏற்படுத்தியுள்ளஉடைப்பு குறித்து தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
முல்லை பெரியாறு அணையில் ஏற்பட்டுள்ள உடைப்பு செய்தி படத்துடன் வெளிவந்துள்ளதை கண்டு அதிர்ச்சிஅடைந்தேன். அணைப்பகுதியில் நிறுத்தப்பட்டடுள்ள கேரள மாநில காவல்துறையினர் மற்றும் கேரள அரசுஅதிகாரிகள் ஒத்துழைப்பு இன்றி இத்தகைய செயல் நடைபெற்று இருக்க முடியாது.
கேரள அமைச்சர்கள் சிலர் முல்லைப் பெரியாறு அணையைத் தங்களால் உடைத்துத் தகர்க்க முடியும் என்றுஏற்கனவே அறிக்கைகள் வெளியிட்டு உள்ளனர். முல்லைப் பெரியாறு அணை உடைவது போலவும், அதனால்ஜந்து மாவட்டங்களில் உள்ள மக்கள் உயிருக்கும், உடைமைக்கும் பெருத்த சேதம் ஏற்படுவது போலவும்காட்சிகளை கற்பனையாகச் ஜோடித்து இணையதளத்தில் விட்டுள்ளது.
இதனால் கேரள மாநில மக்களின் உள்ளத்தில் பயமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. கேரள அரசின் இத்தகையநடவடிக்கை இந்திய ஒற்றுமைக்கு எதிரானது. இச் செயலில் ஈடுபட்ட தேச விரோதிகளுக்கு எதிராக சட்டப்படிநடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
கேரள முதல்வர் அச்சுதானந்தன், அனைத்து கட்சிக்குழுவை அழைத்துக்கொண்டு பிரதமைரைச் சந்தித்துஅணையின் பாதுகாப்பு குறித்து தவறான தகவல்கள் அடங்கி மனு கொடுத்துள்ளார். மேலும் அணையின் நிர்வாககட்டுப்பாட்டை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி இருப்பது சட்டவிரோதமானது.
அணையின் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்கின்ற வகையில் அணையின் பாதுகாப்பு பணியைமத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் அணைக்கு பாதிப்பை ஏற்படுத்தவும், அணையை உடைக்கவும்சதி திட்டம் வகுக்கக்கூடும் நிலை தற்போது உருவாகி இருக்கிறது.
அப்படி ஒரு நிலைமை வந்தால் அது இந்திய ஒற்றுமையின் மீதான நேரடித் தாக்குதலாக அமைந்துவிடும்என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே பெரியாறு அணை பாதுகாப்பதற்கு மத்திய அரசின்தொழில் பாதுகாப்புப்படை மற்றும் துணை ராணுவக் குழுக்களிடம் பாதுகாப்பு பொறுப்பை ஓப்படைக்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி 142 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கானநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தங்களை கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications