காரை மொபெட் மீது மோதிய ஜெயலட்சுமி
திருச்சி:வழக்கு விசாரணைக்காக தானே கார் ஓட்டி திருச்சிக்கு வந்த ஜெயலட்சுமி கோர்ட்அருகே மொபெட் மீது மோதி அதை விபத்துக்குள்ளாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் டி.எஸ்.பி. ராஜசேகரன் மனைவி தற்கொலை வழக்கு உள்ளிட்டவற்றில்கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலட்சுமி சமீபத்தில் ஜாமீனில்சிறையிலிருந்து விடுதலை ஆனார். விடுதலைக்குப் பின்னர் அவர் மதுரைக்குப் போய்விட்டார்.
![]() |
இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நகைக் கடை அதிபர் திருமூர்த்தியிடம்ரூ. 45 ஆயிரம் நகையை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்த வழக்குநேற்று திருச்சி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து விசாரணையில் ஆஜராவதற்காக ஜெயலட்சுமி மாருதி ஆம்னி வேனில்திருச்சிக்குக் வந்தார். காரை அவரே ஓட்டி வந்தார். திருச்சி கோர்ட்டுக்கு அருகேவந்தபோது, ஒரு மொபட் மீது ஜெயலட்சுமியின் வேன் மோதியது.
இதில் மொபட் ஓட்டி வந்தவர் கீழே விழுந்தார். அதன் விளக்கு நொறுங்கியது.மொபட்டில் இருந்த பிரியாணி பொட்டலங்களும் சாலையில் விழுந்து சிதறினது.
இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காருக்குள் இருந்தது யார் என்று அங்குஇருந்தவர்களுக்கு தெரியவில்லை. மொபட்டை ஓட்டி வந்த யோவான் என்பவர்,காருக்குள் இருந்த ஜெயலட்சுமியை கீழே இறங்கி வருமாறு கூறி சத்தம் போட்டார்.
![]() |
ஆனால் காரை விட்டு இறங்காமல் கண்ணாடியை மட்டும் இறக்கிவிட்டு,கோர்ட்டுக்குப் போகிறேன், நேரமாகி விட்டது. அங்கு வந்தால் உங்களுக்கு இழப்பீடுதருகிறேன் என்று கூறியபடி காரை எடுத்துச் சென்றார் ஜெயலட்சுமி.
இதையடுத்து யோவானும் தனது வண்டியில் காரை பின் தொடர்ந்தார். கார்கோர்ட்டுக்குள் நுழைந்ததும் பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் ஜெயலட்சுமி காரோட்டிவந்த அழகைப் படம் பிடிக்க அலை மோதியதைப் பார்த்து யோவான் குழம்பிப்போனார்.
ஏதோ பெரிய விஐபி போல என பீதியடைந்த அவர் யார் உள்ளே இருப்பது என்றுபுகைப்படக்காரர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் சிவகாசி ஜெயலட்சுமிஎன்று கூறவே, ஷாக் ஆகிப் போன அவர், அய்யோடா, இழப்பீடும் வேண்டாம்,ஒன்றும் வேண்டாம் என்று பதறி அடித்து திரும்பி ஓடிப் போய் விட்டார்.
பின்னர் நீதிபதி தெய்வராஜ் முன் நகை மோசடி வழக்கில் ஜெயலட்சுமி ஆஜரானார்.இதே மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலுவும்நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை பிப்ரவரி 5ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைப்பதாகஅறிவித்தார். அதன் பின்னர் ஜெயலட்சுமி மீண்டும் மதுரைக்குக் கிளம்பிப் போனார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications