கிரீஸ் யுஎஸ் தூதரகம் மீது ராக்கெட் வீசித் தாக்குல்
ஏதென்ஸ்:கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீசித் தாக்குதல் நடத்தினர்.
கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்தில்இன்று பயங்கர சப்தம் கேட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்துதம் தீவிரவாத எதிர்ப்புப் படையினர், போலீஸார் விரைந்து வந்தனர். அப்போது தூதரககட்டடத்தின் ஒரு பகுதி எரிந்து கொண்டிருந்தது. ராக்கெட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது தெரிய வந்தது.
இந்த தாக்குதலில் தூதரக கட்டடத்திற்கு அருகே உள்ள சில வீடுகளின் ஜன்னல்கண்ணாடிகள் உடைந்து சிதறின.அப்பகுதி முழுவதையும் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து சீல் வைத்துள்ளனர்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இது ஒரு ராக்கெட் தாக்குதலாகும். அருகில் உள்ளஒரு கட்டடத்திலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தூதரக கட்டடத்தின் 3வது மாடியில் உள்ள கழிப்பறையில் வந்து ராக்கெட் குண்டு விழுந்து வெடித்துள்ளது. இந்தசம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார்.
ராக்கெட் தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்தத் தாக்குதலில் அல் கொய்தாவுக்குத்தொடர்பு உள்ளதா என்பது குறித்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கிரீஸில் செயல்பட்டு வரும் அமெரிக்க எதிர்ப்பு கொரில்லா அமைப்பின் மீதும் போலீஸார் சந்தேகப் பார்வையைதிருப்பியுள்ளனர். இந்த அமைப்பினர் பல வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை கொன்றுள்ளனர். இவர்களில்அமெரிக்க அதிகாரிகளும் அடங்குவர். ஆனால் கடந்த 2002ம் ஆண்டு இந்த அமைப்பு கலைக்கப்பட்டு விட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த அமைப்பினர் ஈராக் மீதான அமெரிக்காவின் நடவடிக்கையைக் கண்டித்துஏதென்ஸில் மாபெரும் ஊர்வலத்தை நடத்தினர். ஆனால் போலீஸார் அவர்களை கண்ணீர்ப் புகைக் குண்டுகளைவீசி கலைத்தனர்.
இதேபோல, 1996ம் ஆண்டு அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் மூன்றுவாகனகள் எரிந்து போயின. அருகாமையில் உள்ள வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications