சிறுவர்களிடம் ரத்தம் உறிஞ்சிய கொடூரன் கைது!
நாகர்கோவில்:நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு ஆசை காட்டி ரத்தம் எடுத்து கொள்ளை லாபம் சம்பாதித்த ரத்தவங்கியின் உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் ரத்த தானம் செய்ய முடியும். அதற்கு கீழே உள்ளவர்களிடம் ரத்தம் எடுக்கக்கூடாது என்பது சட்டம். ஆனால் நாகர்கோவிலில் சொற்ப பணத்தைக் காட்டி பள்ளிச் சிறுவர்களிடம் ரத்தம்உறிஞ்சி கொள்ளை லாபம் சம்பாதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![]() |
நாகர்கோவில் அருகுவிளை என்ற பகுதியைச் சேர்ந்தவர் சேதுகணேஷ். 15 வயதாகும் இவர் வடசேரியில் உள்ளஅரசு உயர்நிலைப் பள்ளியில் 8வது வகுப்பு படித்து வருகிறார்.
இவரது தந்தை வீரமணி குடும்பத்தை விட்டுப் பி>ந்து சென்று விட்டார். இதனால் தாயார் லதா முறுக்கு வியாபாரம்செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
![]() |
சேதுகணேஷின் நண்பர் முகேஷ் குமார். இவருக்கும் 15 வயதுதான். ஒருமுறை செலவழிக்க கையில் பணம்இல்லாததால், வெட்டூரணிமடம் சாலையில் உள்ள ஒரு ரத்த வங்கிக்குச் சென்று ரத்தம் கொடுத்துள்ளனர்.அவர்களிடமிருந்து தலா 350 மில்லி ரத்ததத்தை எடுத்துக் கொண்டு அந்த ரத்த வங்கி உரிமையாளர் ஆளுக்கு ரூ.150 கொடுத்துள்ளார்.
இதையடுத்து இதே வழியில் அடிக்கடி பணம் சம்பாதிக்க முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து கையில் காசு இல்லாவிட்டால் இங்கு வந்து ரத்தம் கொடுத்து பணம் வாங்கிச் செல்லஆரம்பித்தனர். தங்களது நண்பர்களையும் இங்கே அழைத்து வந்து பணம் சம்பாதிக்கும் வழியைக் காட்டினர்.
இந்தப் பணத்தை வைத்து சினிமாவுக்குப் போவது, ஹோட்டலில் போய் சாப்பிடுவது என ஜாலியாக செலவுசெய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சேது கணேஷும், முத்துக்குமாரும் ரத்த வங்கிக்குச் சென்று வழக்கம் போலரத்தம்கொடுத்தனர். ரூ. 150 பணம் கிடைத்தது. ரத்தம் கொடுத்து விட்டு வெளியே வந்தபோது சேதுகணேஷ் திடீரெனமயங்கி விழுந்தார்.
இதைப் பார்த்தும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முகேஷ்குமாரிடம் விசாரித்துள்ளனர். அவர் ரத்த வங்கியில்ரத்தம் கொடுத்து விட்டு வருவதாக கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக வடசேரி காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்ததும் வடசேரி இன்ஸ்பெக்டர் சோனமுத்து தலைமையில் போலீஸார் விரைந்து வந்துசேதுகணேஷை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
சம்பந்தப்பட்ட ரத்த வங்கியில் விசாரணை நடத்தியபோது சிறுவர்களிடம் ரத்தத்தை உறிஞ்சி பல ஆயிரக்கணக்கில்விற்று கொள்ளை லாபம் சம்பாதித்த கொடுமை தெரிய வந்தது.
தலைமறைவான ரத்த வங்கி உரிமையாளர் ராஜா ஐசக்கை போலீஸார் தேடிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம்தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும் நாகர்கோவில் பகுதியில் உள்ள பிற ரத்த வங்கிகளிலும் சிறுவர்களிடம் ரத்தம் எடுக்கப்பட்டதா என்றுசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சிறுவர்களிடம் சொற்ப பணத்தைக் கொடுத்து ரத்தத்தை உறிஞ்சிய கொடுமை நாகர்கோவிலில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக














Click it and Unblock the Notifications