கோவையில் துணை நகரம் இல்லை: தமிழக அரசு
கோவை:கோவை அருகே துணை நகரம் அமைக்கும் திட்டம் இல்லை. இதுதொடர்பாக விவசாய நிலங்களைகையகப்படுத்தும் எண்ண.ம் இல்லை என்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும், மாவட்ட நிர்வாகமும்தெளிவுபடுத்தியுள்ளன.
கோவை அருகே உள்ள வெள்ளலூர், செட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் விவசாய நிலங்களைகையகப்படுத்தி அங்கு துணை நகரம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி கிளம்பியது.
இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து போராட்டத்தில் குதித்தனர். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து கோவையில் நேற்று இரவு மாவட்ட ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டல், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர் ராஜாராம் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினர்.
அப்போது ராஜாராம் கூறுகையில், கோவை நகரிலோ அல்லது தமிழகத்தின் பிற பகுதிகளிலோ துணை நகரம்அமைக்கும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை. விவசாய நிலங்களை கையகப்படுத்தப் போவதாக அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளது தவறானது என்றார்.
ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டல் கூறுகையில், கோவை நகரில் அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ள வணிககட்டடங்களை இடிக்கும் பணியில் எந்த முறைகேடும் இல்லை. அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளகட்டடங்களை மட்டுமே இடித்து வருகிறோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications