ஹஜ்: 231 இந்திய யாத்ரீகர்கள் மரணம்
ஸ்ரீநகர்:இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொண்ட இந்தியர்களில் 231 பேர் இயற்கையான முறையில்மரணமடைந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட பயணிகளில் பலர் செளதியில்இயற்கையான முறையில் மரணமடைந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் மாரடைப்பால் மரணமடைந்துள்ளனர்.சிலர் விபத்துக்களில் இறந்துள்ளனர்.
இதுவரை மொத்தம் 231 பேர் இறந்துள்ளனர். இவர்களில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் 50 பேர். உ.பி. 46,கர்நாடகா, மகாராஷ்டிரா தலா 23, தமிழ்நாடு 18, ஆந்திரா 14, குஜராத் 13, ராஜஸ்தான் 11, ஜம்மு காஷ்மீர் 9,பீகார் 7, மத்திய பிரதேசம் 5, மேற்கு வங்கம் 4, உத்தராஞ்சல், அஸ்ஸாம் தலா 2, மணிப்பூர், ஹ>யானா, புதுச்சேரி,டெல்லி தலா ஒருவர் உயி>ழந்துள்ளனர்.
செளதியில் இறந்தவர்களில் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் குலாம் நபி ஆசாத்தின் சகோதரர் குலாம் காதிர்பட்டும் ஒருவர்.
ஜனவரி 1ம் தேதியுடன் ஹஜ் யாத்திரை முடிவுக்கு வந்தது. இந்த ஆண்டு எந்தவித அசம்பாவிதச் சம்பவமும்,கூட்ட நெரிசலும் இல்லாமல் ஹஜ் யாத்திரை நல்லபடியாக முடிந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின்போது, சாத்தான் மீது கல் வீசும் நிகழ்ச்சியில் 362 பேர் கூட்ட நெரிசலில் சிக்கிஇறந்தனர். கடந்த 16 ஆண்டுகளில் இதுதான் மிகப் பெரிய உயிர்ப் பலியாகும். 2004ம் ஆண்டு தீ விபத்தில் 250பேர் உயிரிழந்தனர்.
காணாமல் போன இந்திய சிறுமி மீட்பு:
இதற்கிடையே மெக்காவில் ஹஜ் யாத்திரையின்போது குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து போன 15 வயதுஇந்தியச் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு அவரது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
ஹபீஸ் சையத் தனது 15 வயது மகள் பாத்திமா மற்றும் குடும்பத்துடன் ஹஜ் யாத்திரை மேற்கொண்டிருந்தார்.பாத்திமா மன நலம் சரியில்லாதவர் மற்றும் உடல் ஊனமுற்றவர்.
மெக்காவில் அவர்கள் யாத்திரை மேற்கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி பாத்திமா காணாமல் போய்விட்டார். அவரைக் கண்டுபிடிக்க சையத் தீவிர முயற்சிகள் செய்தும் கண்டுபிடிக்கவில்லை.
இதையடுத்து பாத்திமா இல்லாமல் அவர்கள் ஊர் திரும்பினர். இந்த நிலையில் காணாமல் போன பாத்திமாகண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மெக்காவில் உள்ள ஒரு மருத்தவமனையில் அவர் மூச்சுத் திணறல் காரணமாகஅனுமதிக்கப்பட்டிருந்தார். பாத்திமாவால் சரியாகப் பேச முடியாததால், ஜேன் டோ என்ற பெயரில் அந்தமருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications