69% இட ஒதுக்கீடுக்கு ஆபத்து-கருணாநிதிராஜினாமா செய்ய ஜெயலலிதா கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாதுகாக்கத் தவறிய முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் எனஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந்திய அரசியல் அமைப்பின் 9வது அட்டவணையில் 1973ம் ஆண்டுக்குப் பின் சேர்க்கப்பட்ட அனைத்துசட்டங்கள், சட்ட திருத்தங்களையும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த முடிவும் என உச்ச நீதிமன்றம் நேற்றுபரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

Jayalalitha

தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தையும் மறு ஆய்வு செய்யவும் நீதிமன்றத்திற்கு அதிகாரம்உண்டு எனவும் அறிவித்துள்ளது. 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இதை விசாரிக்கும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எனது முயற்சியால் தான் 1994ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான 69 இடஒதுக்கீடு சட்டம் உருவாக்கப்பட்டது. அது அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையிலும் சேர்க்கப்பட எனதுஅரசே காரணம்.

இப்போது அந்த இட ஒதுக்கீடுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 9வது அட்டவணை குறித்த வழக்கு விசாரணைநடந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜராக வேண்டிய அட்டர்னி ஜெனரல் மிலன் பானர்ஜி நீதிமன்றத்தில்ஆஜராகவில்லை.

இதனால் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து உருவாகி வருகிறது என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே நான்எச்சரித்தேன். இந்த விஷயத்தில் மத்திய அரசின் இரட்டை வேடத்துக்கு கருணாநிதியும் ஆதரவாக இருந்தார்.வழக்கை உறுதியாக நடத்தாமல் மத்திய அரசும் கருணாநிதியும் ஏமாற்றிவிட்டனர்.

50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது, பொருளாதாரரீதியில் வசதி படைத்தவர்களை இடஒதுக்கிட்டில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் இந்த ஆண்டில்இருந்தே கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் முழுமையான இட ஒதுக்கீட்டை அமலாக்க முடியாத சூழல்உருவாகியுள்ளது. இதன் மூலம் 69 சதவீத இட ஒதுக்கீடு என்பது பழங்கதையாகிவிட்டது.

தங்களுக்கு வாக்களித்த மக்களை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நாடகம் போட்டு நன்றாக ஏமாற்றிவிட்டது.கருணாநிதியின் அலட்சியப் போக்காலும் மத்திய அரசின் இரட்டை வேடத்தாலும் இட ஒதுக்கீடு சட்டமேஆபத்துக்குள்ளாகிவிட்டது. இந்த விஷயத்தில் தமிழர்களை வஞ்சித்த, முதுகில் குத்திய கருணாநிதி அதற்குபொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

தமிழர்களை ஏமாற்றிய கருணாநிதியை பெரியார் மற்றும் திராவிட இயக்கத்தின் தூண் அறிஞர் அண்ணாவின்ஆன்மாக்கள் நிச்சயம் மன்னிக்காது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+