இட ஒதுக்கீட்டை எப்படியும் காப்போம்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:இட ஒதுக்கீட்டை ரத்தம் சிந்தியாவது காப்போம் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அரசியல் சாசனச் சட்டத்தின் 9வது அட்டவணைப் பிரிவின் கீழ் சேர்க்கப்படும் சட்டங்களும் நீதிமன்றத்தின்ஆய்வுக்கு உட்பட்டவைதான் என்று உச்சநீதிமன்றம் நேற்று பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இதனால்தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடுக்கு ஆபத்து ஏற்பட்டும் சூழல் உருவாகியுள்ளது.

Karunanidhi

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்புபிரச்சினைக்கான தீர்வு அல்ல. இட ஒதுக்கீடு சட்டத்தை முழுமையாக ஆய்வு செய்து முடிவு தெரிவிக்க 3நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றமே அறிவித்துள்ளது.

எனவே அந்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இட ஒதுக்கீடு குறித்து முழுமையாக ஆய்வுசெய்து உச்சநீதிமன்றம் அறிவிக்கிறவரை பொறுத்திருப்போம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,

கேள்வி: போகிற போக்கை கவனித்தால், கண்ணீரும் செந்நீரும் சிந்தி வளர்த்த பயிராம் இட ஒதுக்கீடுகொள்கைக்கு கல்லறை கட்டப்படுமோ என்ற சந்தேகம் எழுகிறதே?

பதில்: அஞ்சற்க. கண்ணீர் முழுவதும் காய்ந்து விடினும், சிந்துவதற்கு செந்நீர் நிறைய இருக்கிறது. பெரியார்,அண்ணா, காமராஜர் மூவரும் உருவாக்கிய பட்டாளத்து போர் வீரர்களிடம்.

கேள்வி: சினிமா கட்டணத்தை குறைத்துவிட்டு, மீண்டும் உயர்த்தி விட்டீர்கள் என்று குரல் எழும்புகிறதே?

பதில்: டிசம்பர் 23ம் தேதி வெளியிட்ட அரசாணைப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமஊராட்சி பகுதிகளில் உள்ள திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்களில் அரசு எந்தவிதமாற்றமும் செய்யவில்லை. சென்னையில் அதிக வசதிகள் கொண்ட 3 திரையரங்குகள் தவிர, மொத்தமுள்ள சுமார்1,500 திரையரங்குகளில் மேற்கண்ட அரசாணைப்படி தான் மக்களுக்கு கட்டண விகிதம் வசூலிக்கப்படுகிறது.

கேள்வி: மதிமுகவை உடைக்க நீங்கள் சதி செய்ததாக அந்தக் கட்சி பொதுக்குழுவில் பேசியிருக்கிறார்களே?

பதில்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் தனித்தனி பெயர்களில் தனித்தனிஅமைப்புகளாக இருந்தாலும், பல்வேறு பொதுப் பிரச்னைகளில் ஒன்றுபட்டு பணியாற்றுவது போல திமுகவும்,மதிமுகவும் இணைந்து பணியாற்றலாம் என்ற கருத்தை எழுதியவனும், பேசியவனும் நான். அப்படியிருக்க,அக்கட்சியை உடைக்க சதி செய்தவன் என்பது எப்படி உண்மையாகும்?

கேள்வி: ஆட்டோ கட்டண உயர்வை பயணிகள் வரவேற்கிறார்கள், ஆட்டோ ஓட்டுனர்களும் வரவேற்கிறார்கள்.இருந்தாலும், ஒரு சிலர் அதிருப்தி காட்டுகிறார்களே? (பயணிகள் வரவேற்கிறார்களா????)

பதில்: அரசு சார்பில் சில காரியங்களைச் செய்யும் போது, எல்லாவற்றையும் எல்லோரும் ஆதரிக்க மாட்டார்கள்.ஜனநாயகத்தில் அதையெல்லாம் ஏற்றுக் கொண்டு தான் செயல்பட வேண்டும். ஆட்டோக்களை எல்லாம்அரசுடைமை ஆக்கிவிட்டாலும் கூட, சிலருக்கு அதிருப்தி இருக்கத்தான் செய்யும்.

கேள்வி: பொங்கலை தீபாவளி பண்டிகை போல கொண்டாட வேண்டும் என்கிறார்களே?

பதில்: பல பண்டிகைகள் நமது நாட்டில் மத அடிப்படையில் நடைபெறுகின்றன. பொங்கல் விழா ஒன்று தான்இயற்கைக்கும், உழைப்புக்கும் நன்றி காட்டுகிற உயரிய விழாவாக அனைவருக்கும் பொதுவான சமத்துவவிழாவாக அமைகிறது. பொங்கலன்று புத்தாடை புனைந்து, உற்றார் உறவினர் நண்பர்களுடன் மகிழ்ந்துஉரையாடி, மனித உழைப்பு, மனிதநேயம் இவற்றுக்கு மதிப்பளித்து, மழலையர், மங்கையர், மாணவர், உழவர்,உழைப்பாளிகள் என அனைவரும் களிப்பிலாடும் நாளாக அந்நாள் அமையட்டும்.

கதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் கூட நன்றி காட்டும் திருநாள் அல்லவா. தெருவெல்லாம் தோரணம்,திண்ணைகளில் கோலம், திருவிளக்குகள் சரவிளக்குகளாக ஒளிரட்டும் அந்நாளில்.

கேள்வி: 5 வருடமாக வழங்கப்படாமல் இருந்த ஊக்கத்தொகையை போக்குவரத்து பணியாளர்களுக்கும், சிவில்சப்ளைஸ் பணியாளர்களுக்கும் வழங்கியிருக்கிறீர்கள். கடந்த ஐந்தாண்டு காலமாக வழங்காததற்கு என்ன தான்உண்மையான காரணம்?

பதில்: அவற்றை வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் வழங்கியிருக்கலாம். வழங்க வேண்டும் என்றுதிமுக அரசுக்கு அக்கறை உள்ளது. ஆகவே வழங்குகின்றோம்.

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் தனது ஒப்புதல் இல்லாமலேயே எல்.கணேசனை அழைத்து 4 இடங்களைக்கொடுத்து விட்டதாக மீண்டும் வைகோ குறை கூறுகிறாரே?

பதில்: நான் அனுப்பிய கடிதத்தில் அவரே ஒப்புக்கொண்டு, அதிலே தன் கைப்பட எழுதி கையெழுத்தும் போட்டுஇட்டு அனுப்பியதை அப்படியே நகல் எடுத்து வெளியிட்ட பிறகும், அவர் அதையே சொல்லுகிறார் என்றால்,அவரது கட்சிக்காரர்களை எப்படியும் ஏமாற்றி விடலாம் என்ற எண்ணமா? அல்லது அவர்கள் அவ்வளவுஏமாளிகளா?

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்வர் தஞ்சை பயணம்:

இதற்கிடையே திருவாரூர்-தஞ்சாவூர் இடைய அகல ரயில்பாதை திட்டத்தை துவக்கி வைக்க மலைக்கோட்டைஎக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கருணாநிதி இன்று தஞ்சாவூர் சென்றார். அங்கிருந்து வேன் மூலம் அவர் திருவாரூர்சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+