இலங்கை-ஓடி போன ராணுவத்தினருக்கு வேலை
கொழும்பு:இலங்கை ராணுவத்திலிருந்து விலகி ஓடிப் போன 17,000 ஆயிரம் பேருக்கு பொதுமன்னிப்பு தருவதாகவும், அவர்களை மீண்டும் அதே பணியில் சேர்ப்பதாகவும்இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுடனான தாக்குதலை சமாளிக்க முடியாமல் இலங்கைராணுவத்திலிருந்து அவ்வப்போது வீரர்கள் ஓடிப் போய்விடுவது வழக்கம். கடந்த1983ம் ஆண்டிலிருந்து இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் ராணுவத்தைவிட்டு ஓடிப் போயுள்ளனர்.
இப்படி ஓடிப் போனவர்களை பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக கூறிஅவ்வப்போது திரும்ப அழைப்பதாக இலங்கை ராணுவம் அறிவிக்கும். அதை நம்பிசில பேர் திரும்ப வந்து சேருவார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் போனவர்கள்போனவர்கள்தான்.
இந்த நிலையில் தற்போது ராணுவத்திலிருந்து விலகி ஓடிய 17 ஆயிரம் பேரைமீண்டும் திரும்ப வருமாறு இலங்கை ராணுவம் கூறியுள்ளது. 2003ம் ஆண்டுஇறுதியிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனவர்களுக்குத்தான் இந்தபொது மன்னிப்பு பொருந்துமாம்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கேகூறுகையில், ஜனவரி 20ம் தேதியிலிருந்து 31ம் தேதிக்குள் மீண்டும் ராணுவத்தில்சேருபவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும். அவர்களுக்கு பழைய பணியேதிரும்ப வழங்கப்படும் என்றார்.
இலங்கை ராணுவத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். கடந்த ஆண்டுமட்டும் இவர்களில் 630 பேர் புலிகளுடனான போரில் உயிரிழந்தனர்.
ராணுவத்திலிருந்து தப்பிய ஓடிய நூற்றுக்கணக்கான வீரர்களை ராணுவம் தேடிப்பிடித்து அவர்களை சிறையில் அடைத்து தண்டனையும் வழங்கியுள்ளது.இதனால்தான் ஓடிப் போனவர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் ராணுவத்தில் சேரஆர்வம் காட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களுக்கு உதவும் அமைப்புகளுக்கு குறி:
இந் நிலையில் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்வோர் என்று கூறி இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு உதவும் அமைப்புகளை முடக்கஇலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கெகேலியா ரம்புகவெல்லா கூறுகையில், அம்பாரை மாவட்டத்தில் சமீபத்தில் ராணுவம்நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் வசம் இருந்த பகுதியிலிருந்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸோவா அகதிகள் மறுவாழ்வுஅமைப்புக்குச் சொந்தமான ஒரு பொருள் ராணுவத்திடம் சிக்கியது.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நெதர்லாந்து அமைப்பு விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்வதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.
இலங்கை கிழக்கில் உள்ள தமிழ் அகதிகளுக்கு உதவுவதற்காக அந்த அமைப்பு இங்கு முகாமிட்டுள்ளது. ஆனால் அந்த அமைப்புக்குச் சொந்தமான ஒருபொருள் சந்தேகத்திற்கிடமான வகையில் சிக்கியுள்ளதால் அந்த அமைப்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
அந்த அமைப்பு புலிகளுக்கு உதவியதாக தெரிய வந்தால் அந்த அமைப்பினர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். இதேபால மேலும் சிலஅமைப்புகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இலங்கை அரசின் சட்டத்திற்கு முரணாக இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் விடுதலைப் புலிகளுடன் இந்தஅமைப்பினர் தொடர்பு வைத்துள்ளதாக அறிகிறோம். இருப்பினும் சில அமைப்புகள் தங்களது செயல்பாடுகளை நிறுத்தி விட்டதாகவும் தெரிய வந்துள்ளதுஎன்றார் ரம்புகவெல்லா.
இதுகுறித்த ஸோவா அமைப்பின் பொது விவகாரங்களுக்கான மேலாளர் அன்ஸ்லெம் முடியட்டா கூறுகையில், எங்கள் மீதான புகார்களில் உண்மை இல்லை.அம்பாரையில் இருந்த எங்களது அலுவலகத்தை நாங்கள் மூடி விட்டோம். அங்கு எங்களுக்குச் சொந்தமான எந்தப் பொருளும் இல்லை.
புலிகள் நடத்தி வரும் மருத்துவமனையில் எங்களது பொருள் ஏதேனும் கிடைத்திருந்தால், அவற்றை நாங்கள்தான் கொடுத்ததாக அர்த்தம் கிடையாதுஎன்றார்.
புலிகளுக்கு உதவுவோர் மீது நடவடிக்கை என்று கூறிக் கொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றும்முயற்சியில் இலங்கை அரசு இறங்கியிருப்பதாக தொண்டு நிறுவனங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, ஸோவா அமைப்பின் தொண்டையும், பணியையும் ஐரோப்பிய யூனியன் அங்கீகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நெதர்லாந்துஅமைப்பின் பணி மிகவும் முக்கியமானதாக உள்ளது. பாராட்டுக்குரியதாக உள்ளது என்று ஐரோப்பிய யூனியன் பாராட்டியுள்ளது.
தமிழ் மாணவர்கள் சித்திரவதை:
இதற்கிடையே, யாழ்ப்பாணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கல்லூரியில் படித்து வரும் தமிழ் மாணவர்களை கடத்திச் சென்று இலங்கை ராணுவவீரர்கள் கொடுமைப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த நிருபராஜ் என்ற மாணவர் கடந்த 3ம் தேதி ராணுவ வீரர்கள் கடத்திச் சென்றனர். அவரை 10 நாட்கள் ராணுவமுகாமில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீண்டும் அவரது வீட்டுக்கு அருகே விட்டு விட்டு ராணுவம் திரும்பியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 17 தமிழ்மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications