பெரியார் சிலைக்கு குல்லா-தர்மபுரியில் பதட்டம்
தர்மபுரி:தர்மபுரியில் உள்ள பெரியார் சிலையின் தலையில் பிளாஸ்டிக் குல்லா போடப்பட்டு, கரும்புத் தோகைகட்டப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரியில் உள்ள பெரியார் மன்றம் அருகே பெரியார் சிலை உள்ளது. இந்த சிலைக்கு சில விஷமிகள்பிளாஸ்டிக் குல்லாவை தலையில் போட்டிருந்தனர். மேலும் பெரியார் சிலையைச் சுற்றிலும் கரும்புத் தோகையால்தோரணம் போல கட்டியிருந்தனர். சிலை முன்பு பூவும் தூவப்பட்டிருந்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் மன்றத்தினர், தி.க. தொண்டர்கள் அங்கு பெருமளவில்திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. சிலையை அவமதித்ததாக கருதப்பபடும் ஒரு நபரை அப்பகுதியைச்சேர்ந்தவர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபர் மன நிலை பாதித்தவர் போலத் தோன்றியதால்போலீஸார் அவரை விட்டு விட்டனர்.
பெரியார் தி.க. தலைவருக்கு குண்டாஸ்:
சென்னையில் அயோத்தியா மண்டபம் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் கைதானபெரியார் தி.க. மாவட்டத் தலைவர் தவசிகுமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தின் உள்ளே கடந்த மாதம் ஒரு கும்பல் பெட்ரோல்குண்டுகளை வீசி ரகளை செய்தது. மண்டபத்தின் நுழைவாயிலில் பூஜைப் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தஒருவரும் கடுமையாகதாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பெரியார் தி.க.வைச் சேர்ந்த தென் சென்னை மாவட்டத் தலைவர் தவசிக்குமார்உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தவசிக்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போதுகைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை காவல்துறை ஆணையர் லத்திகா சரண்பிறப்பித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications