262 பெட்ரோல் பங்குகள் உரிமம் ரத்து சரியே
டெல்லி:பாஜக ஆட்சிக்காலத்தில் அனுமதி வழங்கப்பட்ட 262 பெட்ரோல் பங்குகளுக்கான உரிமத்தை ரத்து செய்த முடிவுசரியே என்று உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த வாஜ்பாய் ஆட்சியின்போது நாடு முழுவதும் 3,850 பெட்ரோல் பங்குகள், கேஸ் ஏஜென்சிகளுக்குஅனுமதி வழங்கப்பட்டது. 2000மாவது ஆண்டு ஜனவரி மாதம் முதல் இவை படிப்படியாக அனுமதிக்கப்பட்டன.
இவற்றில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசு அனைத்து உரிமங்களையும் ரத்து செய்தது.
இதை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசின் ரத்து உத்தரவை செல்லாது என அறிவிக்கஅவர்கள் கோரினர். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடைவிதித்தது.
மேலும் இதுதொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.சி. அகர்வால், டெல்லி உயர்நீதிமன்றஓய்வு பெற்ற நீதிபதி பி.கே.பஹ்ரி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தது.
இந்த நீதிபதிகள் குழு 409 பெட்ரோல் பங்குகளுக்கான உரிமங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. அதில் 297உரிமங்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
இன்று இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால், நீதிபதிகள் சி.கே. தாக்கூர்,ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இரு நபர் விசாரணைக் குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது.
அதன்படி 262 பெட்ரோல் பங்குககளுக்கு வழங்கப்பட்ட அனுதியை ரத் செய்து பிறப்பித்த மத்திய அரசின்உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
3 வாரங்களுக்குள் உரிமம் ரத்து செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அரசிடம் ஒப்படைக்கவேண்டும் எனவும் நீதிபதிகள் கெடு விதித்துள்ளனர்.
மற்ற மனுக்கள் புதிய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்புதிய பெஞ்சுக்கு அந்த வழக்குகளை மாற்றுவது குறித்து முடிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பால் பல முக்கிய அரசியல் தலைகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன. பிரபலகாங்கிரஸ் தலைவர்களான கிரிஜா வியாஸ், மோதிலால் வோரா, சந்தோஷ் மோகன் தேவ், மார்க்கரெட் ஆல்வா,சுரேஷ் கல்மாடி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், முன்னாள் கர்நாடக முதல்வர் பங்காரப்பா மற்றும் பாஜக பிரபலங்கள்உள்ளிட்டோரும் பயனாளிகளில் முக்கியமானவர்கள் ஆவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications