கொள்ளையடித்து காதலியுடன் ஜாலி-இருவர் கைது
சென்னை:காதலியுடன் ஜாலியாக ஊர் சுற்றவும், உல்லாசம் அனுபவிக்கவும் போலீஸ் வேடத்தில்போய் கொள்ளை அடித்த நபரையும், அவரது கூட்டாளியையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
சென்னை நகரில் போலீஸ் வேடத்தில் சிலர் மோட்டார் சைக்கிள்களில் வந்து வாகனசோதனை என்ற பெயரில் பணம் பிடுங்குவதாகவும், நகை உள்ளிட்ட பொருட்களைபறிமுதல் செய்து செல்வதாகவும் போலீஸாருக்குப் புகார்கள் வந்தன.
![]() |
இதையடுத்து இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறை ஆணையர் லத்திகாசரண் உத்தரவிட்டார். கூடுதல் ஆணையர் ஜாங்கிட்டின் நேரடி மேற்பார்வையில்தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டது.
தனிப்படை போலீஸாரின் தீவிர வேட்டையில் இருவர் சிக்கினர். ஒருவர் ராயபுரத்தைச்சேர்ந்த சீனு என்கிற பர்மா சீனிவாசன். இன்னொருவர் பெயர் பாபு. இவர்வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர்.
இவர்களிடமிருந்து 60 பவுன் நகைகள், 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவர் மீதும் 19 வழக்குகள் நிலுவையில்உள்ளதும், 13 கைது வாரண்ட்டுகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.
இருவரும் படு வித்தியாசமாக கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இரவில்மட்டும்தான் இவர்கள் திருட்டு, கொள்ளையில் ஈடுபடுவார்கள். டிப்டாப்பாக போலீஸ்உடை அணிந்து கொண்டு ஒரு போலி போலீஸ் மோட்டார் சைக்கிளில் நின்றுகொள்வார்கள். அந்தப் பகுதியில் வரும் வாகனங்களை மடக்கி ஆர்.சி. புக் இருக்கிறதா, லைசன்ஸ்இருக்கிறதா என்று கேட்டு இல்லாதவர்களிடம் கைக் கடிகாரம், பணம், மோதிரம்உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொள்வார்கள். இதுபோல கடந்த ஒரு வருடமாக கொள்ளையடித்து வந்துள்ளனர். இருவரும்சிறையில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்டு இந்த கொள்ளைத் தொழிலில்இறங்கியுள்ளனர். இதில் பாபுவின் தாயார் ஒரு விபச்சாரப் பெண்ணாம். சீனிவாசனுக்கும், பாபுவின்தாயாருக்கும் கள்ளத் தொடர்பும் இருந்துள்ளது. கொள்ளையடித்து வந்த பணத்தில்விபச்சாரிகளுடன் ஜாலியாக இருப்பாராம் சீனிவாசன். பாபுவுக்கு துணை நடிகையான ஹெலன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தஹெலன் ஆசைக்காதலன் என்ற படத்தில் நடித்துள்ளார். சினிமா நடிகை என்பதால்அவருக்காக செலவழிக்க நிறைய பணம் தேவைப்பட்டதால் இந்த வழிப்பறிக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் பாபு. ஆகஸ்ட் 31ம் தேதி ஹெலனை வடபழனி முருகன் கோவிலில் வைத்துத் திருமணம்செய்து கொண்டார் பாபு. கொள்ளையடித்து தனக்கு பாபு செலவழிப்பது ஹெலனுக்குத்தெரியாதாம். பெரிய பணக்காரர் போல என நினைத்துக் கொண்டாராம். ஆனால் பாபு கொள்ளையன் என்று தெரிய வந்ததும் அவரை விட்டு ஹெலன் பிரிந்துபோய் விட்டார். தன்னை விட்டுப் பிரிந்து சென்ற ஹெலனை, தன்னோடு சேர்த்துவைக்க வேண்டும் எனக் கோரி வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்பாபு. அவர் கொள்ளையன் என்று தெரியாமல் போலீஸாரும் மெனக்கெட்டு ஹெலனைஅழைத்து வந்து சேர்த்து வைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் ஹெலன் மறுத்துவிட்டாராம். கைது செய்யப்பட்ட பாபு, சீனிவாசனிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களைஆணையர் லத்திகா சரண் பார்வையிட்டார். இந்தக் கொள்ளைக் கும்பலைப் பிடித்ததனிப்படை போலீஸாருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். இந்தக் கும்பலிடம் மாட்டி செல்போன், பணத்தை இழந்ததில் பெரும்பாலானவர்கள்சாப்ட்வேர் என்ஜினியர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. |
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications