தமிழகம் to
சென்னை:ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டில் இருந்து வட மாநிலங்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில்கள் விடப்படும் எனஇந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கார்ப்பரேசனின் கூடுதல் பொது மேலாளர் வினயம் கூறியதாவது,
எங்கள் கார்ப்பரேசன் சார்பில் வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கு சுற்றுலாரயில் இயக்கப்படுகிறது. அதுபோல தமிழ்நாட்டில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் வட மாநிலங்களுக்கு சுற்றுலாரயில் இயக்கப்படவுள்ளது. இந்த பயணத்திற்கு பாரத தரிசனம் என்று பெயர் இடப்பட்டுள்ளது.
இந்த மாதம் 29ம் தேதி மதுரையில் இருந்து ரிஷிகேஷ், ஹரித்வார், ஆக்ரா, டெல்லி போன்ற வட மாநிலங்களுக்குஇந்த சுற்றுலா ரயில் இயக்கப்படும். இதில் 12 பெட்டிகளும் மொத்தம் 400 படுக்கை வசதியும் உண்டு.
14 நாட்கள் கொண்ட பயணத் திட்டத்திற்கு ஒரு நபருக்கு ரூ. 7,000 முதல் 8,000 வரை வசூலிக்கப்படும். ரயிலில்போய் வர, தங்குமிடம், உணவு ஆகியவை பயண திட்ட கட்டணத்தில் அடங்கும். கோவில்கள், புரதானசின்னங்கள் நுழைவு கட்டணம், சுங்க வரி, பஸ் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கான கட்டணம், சுற்றுலாஇடங்களை சுற்றிப் பார்த்தல் என்று அனைத்து கட்டணங்களும் இதில் அடங்கும்.
இந்த சுற்றுலா ரயில் பயணத்திற்கான முன்பதிவு நடந்து வருகிறது. இதுகுறித்து மேலும் தகவல்களுக்கு சென்னைசேத்துப்பட்டில் உள்ள இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications