மருமகள்களுக்கு மாஜி மந்திரி குடும்பம் கொடுமை
சேலம்:அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலையின் மகன் வரதட்சணைக் கொடுமை செய்து தன்னைக்கொல்ல முயன்றதாக அவரது மனைவி சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அதே போல செம்மலையின் இரண்டாவது மகனின் மனைவியும் வரதட்சணை கொடுமை காரணமாக கணவரைபிரிந்துவிட்டதோடு விவகாரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
![]() |
சேலம் மாவட்டம் குஞ்சாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. இவர் தீண்டாமை ஒழிப்புப் பிரிவுடி.எஸ்.பியாக உள்ளார். இவரது மகள் வாணி ப்ரீத்தா. இவருக்கும் முன்னாள் அமைச்சர் செம்மலையின் மகன்எழில் அமுதனுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவருக்கும் ஒன்றரை வயதில் பூஜா என்றமகள் உள்ளார்.
எழில் அமுதனுக்கு எந்த வேலையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் சும்மா தான் இருக்கிறார்.ஆனால், இவர் ஒரு வக்கீல் என்று பொய் சொல்லி வாணியை திருமணம் செய்துள்ளனர் மாஜி மந்திரிசெம்மலையின் குடும்பத்தினர்.
சில நாட்களுக்கு முன் மேட்டூர் போலீஸில் வாணி புகார் கொடுத்தார். அதில் செம்மலை, அவரது மனைவி,கணவர் எழில் அமுதன் ஆகியோர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கூறியிருந்தார்.
இதன் பேரில் செம்மலை, மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் மீது கொலை முயற்சி,வரதட்சணைக் கொடுமை, துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
![]() |
இந்த நிலையில் சேலம் வந்து காவல்துறை ஆணையர் கோபாலகிருஷ்ணனை சந்தித்து செம்மலை குடும்பத்தினர்மீது வாணி தனியார் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து அவர் கண்ணீர் மல்கக் கூறுகையில், கல்யாணத்தின்போது எனது வீட்டில் 100 பவுன் நகை,லட்சக்கணக்கில் பணம், கார் மற்றும் பொருட்களை கொடுத்தனர்.
ஆனால் அது போதாதென்று அடிக்கடி நகை, பணம் வாங்கி வருமாறு கூறி செம்மலை வீட்டில் என்னைக்கொடுமைப்படுத்தினர். குறிப்பாக எனது மாமியாரும், கணவரும்தான் என்னை அடித்துச் சித்திரவதை செய்தனர்.
எனது கணவர் வக்கீலாக பணியாற்றுவதாக கூறித்தான் திருமணம் செய்தார்கள். ஆனால் அவர் படிப்பைமுடிக்கவே இல்லை. எனது 50 பவுன் நகைகளையும், காரையும் விற்று விட்டனர். ஏன் என்று கேட்டதற்கு வீட்டில்உள்ள அனைவரது கால்களிலும் விழ வைத்து மன்னிப்பு கேட்கச் செய்தனர்.
நல்ல சாப்பாடு கூட போட மாட்டார்கள். கடந்த 12ம் தேதி எனது வீட்டிலிருந்து 10 லட்சம் ரூபாய் வாங்கிவருமாறு எனது மாமியார் கூறினார். நான் எதற்கு என்று கேட்டபோது எனது கணவர் என்னைக் கழுத்தைநெரித்துக் கொல்லப் பார்த்தார்.
இதற்கு மேலும் இங்கு இருக்க முடியாது என்பதால்தான் எனது தந்தைக்குப் போன் செய்து அவரை வரவழைத்துநானும் எனது குழந்தையும் குஞ்சாண்டியூருக்கு வந்து விட்டோம் என்று கூறினார் வாணி.
வாணியின் புகார் குறித்து காவல்துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், மேட்டூரில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடம் என்பதால் சேலத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். மேட்டூர் வழக்குசேலத்திற்கு மாற்றப்படும். அதன் பின்னர் விசாரணை தொடங்கி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
2வது மருமகளும் பிரிந்தார்:
இதற்கிடையே செம்மலையின் இரண்டாவது மகனும் மனைவியை பிரிந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன.
செம்மலையின் இன்னொரு மகனான டாக்டர் விஜயராகவனுக்கும் பெங்களூரைச் சேர்ந்த புனிதாவுக்கும் 3மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. ஆனால், 15 நாட்கள் மட்டுமே இருவரும் குடும்பம்நடத்தியுள்ளனர்.
இந் நிலையில் எம்.எஸ். படிக்க ரூ. 30 லட்சம் வரதட்சணை வாங்கி வரச் சொல்லி புனிதாவை செம்மலைகுடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதையடுத்து கனவரை விட்டுப் பிரிந்துவிட்டார் புனிதா.
மேலும் விவாகரத்து கோரி சேலம் குடும்ப நல நீதிமன்றத்தில் புனிதா வழக்கும் தொடர்ந்துள்ளார். வாணி ப்ரீத்தாவிவகாரம் வெளியில் வந்த பிறகு தான் புனிதா விஷயமும் வெளியில் தெரியவந்துள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா














Click it and Unblock the Notifications