சட்டீஸ்கர் ஆளுநராக தமிழர் நியமனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:சட்டீஸ்கர் மாநில ஆளுநராக தமிழரான நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகாலாந்து மாநில ஆளுநராக கேரளாவை சேர்ந்த கே.சங்கர நாராயணன்நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டீஸ்கர் மாநில ஆளுநராக இருக்கும் கிருஷ்ணமோகன் சேத்தின் பதவி காலம்முடிவடைவதால், அப்பதவிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த நரசிம்மன்நியமிக்கப்பட்டுள்ளர். இவர் மத்திய புலனாய்வு துறையில் (இன்டெலிஜென் பீரோ) 32ஆண்டுகள் பணியாற்றிய பின் ஓய்வு பெற்றவர்.

முதலில் அவர் நாகாலாந்து ஆளுராக நியமிக்கப்பட்டார். ஆனால், அதை அவர்விரும்பததால் சட்டீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளர்.

நாகாலாந்து ஆளுநர் பதவிக்கு கேரளவை சேர்ந்த கே.சங்கர நாராயணன்நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கேரள நிதியமைச்சராகவும், ஐக்கிய ஜனநாயகமுன்னணியின் அமைப்பாளராகவும் இருந்தவர்.

ஆந்திரா, கர்நாடகா, மேகலயா, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கும் விரைவில்புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர். டெல்லி, ஹரியானா மாநில ஆளுநர்களும்மாற்றப்படுவ ர் என்று தெரிகிறது.

ஆந்திர மாநில ஆளுநராக இருந்த சுஷில்குமார் ஷிண்டே மத்திய அமைச்சரானதால்,தமிழக ஆளுநர் பர்னாலா தான் அந்தப் பொறுப்பையும் கூடுதலாக கவனித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+