சரக்குக் கப்பலைத் தகர்த்த கடற் புலிகள்
கொழும்பு:இலங்கையில், சரக்குக் கப்பல் ஒன்றை நடுக் கடலில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட படகில் சென்று மோதிகடற்புலிகள் பிரிவு தகர்த்தது. இதில் உயிரிழப்பு குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை. இந்தக் கப்பலில்இருந்தவர்களில் 2 பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.
இலங்கையின் கிழக்கில் உள்ள வாகரையைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறியுள்ளது. இருப்பினும் அங்குதொடர்ந்து கடும் சண்டை நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிர் தப்பி தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், லிவர்பூல் நகரிலிருந்து ஒரு தனியார் கப்பல் கோதுமை மூடைகளுடன் காங்கேசன் துறைதுறைமுகத்திற்கு வந்தது. அக்கப்பலில் 19 ஊழியர்கள் இருந்தனர். இவர்களில் 10 பேர் சிங்களர்கள், 7 பேர்இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள். 2 பேர் இந்தியர்கள்.
காங்கேசன் துறையில் ராணுவத்தினருக்கு கோதுமை மூட்டைகளை இறக்கி விட்டு கப்பல் கிளம்பியது. பருத்தித்துறை பகுதியில் கப்பல் போய்க் கொண்டிருந்தபோது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட புலிகளின் படகு, அந்தசரக்குக் கப்பலின் மீது மோதியது.
இதில் கப்பல் வெடித்து தீப்பிடித்து எறிந்தது. மேலும் சில படகுகளில் வந்த கடற்புலி வீரர்கள் கப்பல் மீதுசரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து கப்பலில் பாதுகாப்புக்காக இருந்த கடற்படை வீரர்கள், படகில் இருந்தவர்களை துப்பாக்கியால்சுட்டனர். தகவல் அறிந்தது விமானப்படை ஹெலிகாப்டர்கள் அங்கு வந்து புலிகளின் படகுகள் மீது தாக்குதல்நடத்தின.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த சண்டையில் விடுதலைப் புலிகளின் 2 படகுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன.
கப்பல் மோது வெடிகுண்டு நிரப்பப்பட்ட படகு மோதியதில் அதில் இருந்த ஊழியர்கள் கதி என்ன ஆனதுஎன்பது தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications