7 நிமிஷம் லேட்டாக கிரிக்கெட் ஒளிபரப்பு!
டெல்லி:இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான நேரடி ஒளிபரப்பை 7 நிமிடங்கள் தாமதமாகதூர்தர்ஷனில் ஒளிபரப்ப டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடரை நேரடியாகஒளிபரப்பு செய்யும் உரிமையை நிம்பஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த நிறுவனம் புதிதாக ஆரம்பித்துள்ள தனது நியோஸ்போர்ட்ஸ் டிவி மூலம் போட்டிகளை நேரடியாகஒளிபரப்புகிறது. தங்களுக்கும் ஒளிபரப்புஉரிமையை வழங்குமாறு மத்திய அரசின் தூர்தர்ஷன் நிம்பஸுக்குக்கோரிக்கை விடுத்தது.
ஆனால் அதற்கு சில நிபந்தனைகளை விதித்தது நிம்பஸ். அதை தூர்தர்ஷன் ஏற்கவில்லை. இந் நிலையில் நிம்பஸ்நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது.
அதில் தூர்தர்ஷன் நிறுவனம் தனது நிபந்தனைகளுக்கு உடன்பட மறுப்பதால், ஒளிபரப்பு உ>மையை பங்கிட்டுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், தூர்தர்ஷனுக்குநிம்பஸ் தனது ஒளிபரப்பு உரிமையை வழங்க வேண்டும். அதை தூர்தர்ஷன் உடனடியாக ஒளிபரப்பாமல், 7நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பு செய்ய வேண்டும். பிப்ரவரி 8ம் தேதி வரை இந்த உத்தரவு பொருந்தும் என்றுஇடைக்காலத் தீர்ப்பளித்தது.
எனவே நாளை கட்டாக்கில் நடைபெறும் 2வது போட்டி முதல் கடைசிப் போட்டி வரை அனைத்துப்போட்டிகளும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்படும், 7 நிமிடம் தாமதமாக.












Click it and Unblock the Notifications