பஸ்-சரக்கு ரயில் மோதல்: பயணிகள் தப்பினர்
சென்னை:சென்னை கொருக்குப்பேட்டை அருகே சரக்கு ரயிலும் பஸ்சும் மோதிக் கொண்டன. ஆனால், அதிர்ஷ்டவசமாகபயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
கார்னேசன் நகர் எண்ணூர் சாலையில் ஆளில்லா ரயில்வே கேட் உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்நிறுவனத்துக்கு இந்த வழியாக சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இங்கு அடிக்கடி விபத்துகள் நடந்ததால் ஆளில்லா ரயில்வே சந்திப்பில் கேட் அமைக்கப்பட்டது. ஆனால்,இன்னும் ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.
இன்று காலை உயர் நீதிமன்றத்தில் இருந்து தண்டையார் பேட்டைக்கு கதிர்வேல் என்ற டிரைவர் 44 சி அரசுபஸ்ஸை ஓட்டிச் சென்றார்.
ஆளில்லா கேட்டில் ரயில் வருவதை பார்க்காமல் பஸ்ஸை தண்டவாளத்தின் மீது டிரைவர் ஓட்டினார். ரயில்வருவதைப் பார்க்காமல் பொறுப்பின்றி டிரைவர் பஸ்ஸை ஓட்ட, ரயிலை பார்த்துவிட்ட பயணிகள் பதறிஅலறினர். இதையடுத்து சடன் பிரேக் போட்டார் டிரைவர்.
ஆனாலும் பஸ்சின் முன் பக்கம் தண்டவாளத்தை நெருங்கிவிட்டது. பஸ்சின் முன் பக்கம் சிறிய அளவில்தண்டவாளத்தை எட்டிக் கொண்டிருந்த நிலையில் அதன் மீது ரயில் மோதியது.
ரயிலை கவனிக்காமல் பஸ்ஸை ஓட்டினாலும், பின்னர் அவசரமாக செயல்பட்டு பிரேக்கை போட்டு பஸ்ஸைநிறுத்தியதால் தான் பெரும் விபத்தை தவிர்த்துள்ளார் டிரைவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications