ரூ. 45 கோடி முதலீடு-சிக்கலில் விஜய்காந்த்!
சென்னை:விஜய்காந்த் வீடுகள், உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் சில முக்கிய சொத்துக்களின்ஆவணங்கள், நகைகள், வங்கி லாக்கர் சாவிகள் உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
இந்த ரெய்டின்போது விஜயகாந்த்தின் சகலையான ராமச்சந்திரன் புதுச்சேரி அரியூரில் நடத்திவரும் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி தொடர்பான ஆவணங்களும்வரித்துறையினரிடம் சிக்கின.
அதி நவீன வசதிகளுடன் கூடியதாக இந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைஉள்ளது. இதில் சகலை எவ்வளவு பணம் முதலீடு செய்துள்ளார், விஜயகாந்த்துக்குஇதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து வருமான வரித்துறையினர் தீவிர விசாரணைநடத்தினர்.
அப்போது இக் கல்லூரியில் ரூ. 45 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளதுதெரியவந்தது.
சகலை ராமச்சந்திரனிடம் இந்தப் பணம் ஏது என்று வருமான வரித்துறையினர்கேட்டபோது, ரூ. 35 கோடியை வங்கிகளில் கடனாக பெற்றதாக தெரிவித்தார். மீதப்பணம் ரூ. 11 கோடிக்கு கணக்கு சொல்ல முடியாமல் தவித்தார்.
![]() |
எந்தெந்த வங்கிகளில் ரூ. 35 கோடியை கடன் வாங்கினீர்கள் என்று கேட்டதற்கும்அவரிடம் சரியான பதில் இல்லை.
இதனால் இந்த ரூ. 45 கோடி பண விவகாரத்தில் விஜய்காந்த் தரப்பு சிக்கலில் மாட்டக்கூடும் எனத் தெரிகிறது.
மேலும் சென்னையில் விஜய்காந்தின் மச்சான் சுதீஷ் நிர்வகித்து வரும் லீக் கிளப்கேளிக்கை விடுதி இந்த ராமச்சந்திரனின் பெயரில் தான் உள்ளது. இந்த கிளப்பில்உறுப்பினராக கட்டணம் ரூ. 1 லட்சமாகும். ஆக, இந்த கிளப் உண்மையிலேயேயாருடையது? அதற்கான முதலீடு யாருடையது என்ற பின்னணியை ஆராயும்வேலையிலும் வருமான வரித்துறை இறங்கியுள்ளது.
இந் நிலையில் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
விஜய்காந்த், உறவினர்களுக்கு ரூ. 60 கோடி சொத்து உள்ளதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களுக்கு கணக்கு, வழக்கும் சரியாகஇல்லை. இந்த சொத்துக்கள் மூலமான வருவாய் குறித்தும் சரியான கணக்கு இல்லை.
அவரது வீட்டில் உள்ள நகைகளின் மதிப்பு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. கட்சிஅலுவலகத்தில் நடந்த சோதனையில் கட்சியின் நிதிக் கணக்கும் சரியாகபராமரிக்கப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பொறியியல் கல்லூரி விஷயத்தில் வரவு, செலவு கணக்கு சரியில்லை. ரூ. 10 கோடிஅளவுக்கு விஜய்காந்தால் கணக்கு சொல்ல முடியவில்லை. மதுரையில் விஜய்காந்தின்அக்காள் வீட்டில் ரூ. 2 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இந்தப் பணத்துக்கும்கணக்கு இல்லை. மேலும் 12 காரட் வைரம் உள்ட 12 லட்சம் ரூபாய் நகைகளும்கைப்பற்றப்பட்டுள்ளன.
விஜய்காந்தின் உறவினர் ரவிச்சந்திரன் வீட்டில் 2.3 கிலோ நகைகள் ருந்தன. அவரதுசொத்து மதிப்பு ரூ. 33 லட்சம். ஆனால், இந்த சொத்து எப்படி வந்தது என்பதற்குவிளக்கம் இல்லை. இதனால் இந்த சொத்துக்கள் முடக்கப்படும்.
விஜய்காந்த் அறக்கட்டளை சொத்து மட்டும் ரூ. 45 கோடியாகும். அவரது வங்கிலாக்கர்களையும் சோதனையிடவுள்ளோம்.
அவரது முழு சொத்து விவரம், கைப்பற்றப்பட்ட பொருட்கள் பட்டியல் நாளைவெளியிடப்படும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications