கப்பலில் ராணுவ அதிகாரி மர்ம சாவு!
சென்னை:சென்னை வந்த கப்பலில் பயணித்த ராணுவ அதிகாரி, பூட்டிய அறைக்குள், உட்கார்ந்த நிலையிலேயேபிணமானார். அவர் இயற்கையாக இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்துவிசாரணை நடந்து வருகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்ட்டிமிஸ் என்ற பிரமாண்ட சொகுசு பயணிகள் கப்பல் கடந்த டிசம்பர் 2ம் தேதி 1000பயணிகளுடன் கொச்சிக்குக் கிளம்பியது. லண்டனிலிருந்து கிளம்பிய இக்கப்பல், நேற்று சென்னைக்கு வந்தது.
எரிபொருள் நிரப்பிக் கொண்டு மீண்டும் கொச்சிக்குக் கிளம்பத் தயாரானபோது கப்பலின் கேப்டனுக்கு ஒருதகவல் கிடைத்தது. பயணி ஒருவர் பூட்டிய அறைக்குள் உட்கார்ந்த நிலையில் பிணமாக கிடப்பதாக வந்ததகவலால் கப்பல் புறப்படுவது நிறுத்தப்பட்டது.
துறைமுகம் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு துணை ஆணையர் சூடேஸ்வரன் தலைமையில் போலீஸார்கப்பலுக்கு விரைந்தனர். பின்னர் அந்த அறைக் கதவு உடைக்கப்பட்டு போலீஸார் உள்ளே சென்றுபார்த்தனர்.
அங்கு ஒரு இருக்கையில் அமர்ந்தபடி ஒருவர் பிணமாகக் கிடந்தார். அவருக்கு அருகே நிறைய மது பாட்டில்கள்இருந்தன.அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் அவர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அல்லதுதற்கொலை முயற்சியாஎன்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இறந்த பயணியின் பெயர் ஜோசப் தாமஸ் கால்வார்க். 55 வயதாகும் இவர் இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றிஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். டோண்ட் டிஸ்டர்ப் மீ என்ற வாசகத்தை கதவுக்கு வெளியே எழுதி வைத்து விட்டு2 நாட்களாக அறையைப் பூட்டிக் கொண்டு மது அருந்தியுள்ளார் ஜோசப்.
அவரது உடல் பிரேதப் ப>சோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அதன் பின்னர் உடல் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெ>கிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications