சேப்பாக்கத்தை மூழ்கடித்த ரசிகர் வெள்ளம்!
சென்னை:இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியைக் காண சென்னை சேப்பாக்கம்மைதானத்தில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.
முதல் இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய போட்டியில் வென்றால் தொடரைக்கைப்பற்றும். அதே சமயம், இந்தியாவை வெல்வோம் என மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் லாராசொல்லியுள்ளார். இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும், போட்டித் தொடரில் விறுவிறுப்பும் கூடியது.
டிக்கெட் விற்பனை ஆரம்பமான அன்றே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன. இந்த நிலையில்இன்று காலை முதலே ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வரத் தொடங்கி விட்டனர். எப்போது கிரிக்கெட்நடந்தாலும் ரசிகர்கள் அலை கடலென திரண்டு வந்து வங்கக் கடலுக்கு சவால் விடுப்பது வழக்கம்.
அதை மீண்டும் நிரூபிப்பது போல இன்றும் காலை முதலே ரசிகர் கூட்டம் திமுதிமுவென சேப்பாக்கத்திற்கு வந்துகுவிந்தது. சென்னை ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதி ரசிகர்கள், வெளி மாநில ரசிகர்களும்ஏராளமான வந்தனர்.
கடந்த 2005ம் ஆண்டு நவம்பரில் காட்சி ஒரு நாள் போட்டி நடந்தது. மழை காரணமாக அடுத்த மாம் நடந்தடெஸ்ட் போட்டி ஒரு பந்து கூட விசப்படாமல் ரத்தானது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
இந் நிலையில் மீண்டும் விறுவிறுப்பான ஒரு போட்டி சென்னையில் நடப்பதால் ரசிகர் கூட்டம் பெரும்ஆர்வத்துடன் வந்து குவிந்தது.
பலத்த சோதனைக்குப் பின்னரே ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுப்பப்பட்டனர்.சில பொருட்களை உள்ளேகொண்டு வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதால் அப்படிப்பட்ட பொருட்களுடன் வரும் ரசிகர்கள்அவற்றை விட்டு விட்டு வருமாறு கூறி திருப்பி அனுப்பப்பட்டனர்.
வெளியூர், வெளி மாநில ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் நேற்றே வந்து விட்டனர். இதனால் சென்னையின்விடுதிகள், ஹோட்டல்கள், அறைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. பலர் உறவினர்கள், நண்பர்களின்இல்லங்களிலும் வந்து தங்கி கிரிக்கெட் பார்க்க வந்தனர்.
மைதானத்திற்கு வெளியே முகத்தில் விதவிதமாக பிரகாசிக்க வைக்கும் பெயிண்டர்கள், பிரஷ்ஷும்,பெயிண்டுமாக காத்திருந்தனர். தேசியக் கொடியை முகங்களில் வரைந்துவிட்டு செம காசு பார்த்தனர்.
இதுதவிர தொப்புகள், சிக்ஸர், போர் போர்டுகள், கிரிக்கெட் வீரர்களின் படங்கள் அடங்கிய பதாகைகள்ஆகியவற்றின் விற்பனையும் அமர்க்களப்பட்டது.
போட்டியையொட்டி சென்னை நகரின் முக்கியப் பகுதிகளிலிருந்து சேப்பாக்கம் வரை 46 சிறப்புப் பேருந்துகள்இயக்கப்படுகின்றன. இதேபோல கடற்கரையிலிருந்து திருவான்மியூர் வரை இயக்கப்படும் மாடி ரயில்களும்கூடுதலாக விடப்பட்டுள்ளன. போட்டி முடிவடைந்து சில மணி நேரங்கள் வரை இவை இயக்கப்படவுள்ளன.
சேப்பாக்கம் ஸ்டேடியம் - ஒரு பார்வை:
சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 50,000 பேர் வரை அமர்ந்து போட்டிகளை பார்க்க முடியும். ரசிகர்களைக்குஷிப்படுத்தும் வகையில் இருக்கைகள் அனைத்தும் அதி நவீனமாக மாற்றப்பட்டுள்ளது.
இங்கு இதுவரை 10 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் ஒரு ஆட்டம் டை ஆனது, ஒரு ஆட்டம்மழையால் ரத்தானது.
இந்திய அணி இங்கு மொத்தம் 6 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் 2ல் வெற்றி, 2ல் தோல்வி கிடைத்துள்ளது.ஒரு ஆட்டம் டை ஆனது, இன்னொரு ஆட்டம் மழையால் ரத்தானது.
5 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றியைப் பெற்றுள்ளது.
ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக 1997ம் ஆண்டு எடுத்த 327 ரன்கள்உள்ளன. அப்போட்டியில் சயீத் அன்வர் 194 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார்.
இந்திய அணி இந்த மைதானத்தில் எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் 292 ரன்களாகும். 1997 போட்டியில்தான்பாகிஸ்தானுக்கு எதிராக இந்த ஸ்கோரை எட்டியது இந்தியா.
தனிநபர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோக சயீத் அன்வரின் 194 ரன்கள் உள்ளது. இந்திய வீரரர்களில் ராகுல்டிராவிட் 107 ரன்களை எடுத்ததே இங்கு அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
சிறந்த பந்துவீச்சு: இந்தியாவுக்கு எதிராக 61 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து பாகிஸ்தான் ஆக்யூப்ஜாவித் சிறந்த பந்துவீச்சைக் கொடுத்துள்ளார்.
அதிக விக்கெட்டுகள் எடுத்தவராக ஆஸ்திரேலியாவின் நெல் 3 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகளைவீழ்த்தியுள்ளார். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 4 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் முதல் முறையாக 1987ம் ஆண்டு ஒரு நாள் போட்டி நடந்தது. உலகக் கோப்பையின்3வது ஆட்டமான அதில், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 270 ரன்கள்எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 269 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கடைசியாக 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இங்கு மோதின. ஆனால் மழைகாரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது. பின்னர் காட்சிப் போட்டியாக இதை நடத்திசமாளித்தனர்.
இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இதுவரை:
இரு அணிகளும் இதுவரை 88 முறை மோதியுள்ளன. அதில் இந்தியா 34 போட்டிகளிலும் மேற்கு இந்தியத்தீவுகள் - 52 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications