இந்தியா-வெ.இண்டீஸ் சென்னையில் மோதல்
சென்னை:இந்திய, மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான 3வது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம்எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பகலிரவுப் போட்டியாக இன்று நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்றகணக்கில் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் 3வது ஒரு நாள் போட்டிநடைபெறுகிறது.
இப்போட்டி பகல் இரவுப் போட்டியாக நடைபெறுகிறது. சென்னையில் மாலைக்கு மேல் கடும் பனிப்பொழிவுஇருப்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே ரன்களைக் குவிக்கும் சாதகமான வாய்ப்புகள் உள்ளன.எனவே டாஸ் வெல்வது இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும்.
இப்போட்டியில் இந்தியா வென்றால் தொடரைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில்பங்கேற்கும் இந்திய அணியில், முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முதல் போட்டியில் 99 ரன்கள் குவித்த கங்குலி, ஜாகிர் கான், விக்கெட் கீப்பர் டோணி ஆகியோருக்கு ஓய்வுகொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக ராபின் உத்தப்பா, அணில் கும்ப்ளே, யுவராஜ் சிங் ஆகியோர்இடம் பெறுவார்கள். விக்கெட் கீப்பராக திணேஷ் கார்த்திக் செயல்படுவார்.
ராபின் உத்தப்பாவும், கெளதம் காம்பீரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவர்.
சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை இரு முறை மோதியுள்ளன. 1994ல் நடந்த அந்தப்போட்டியில், இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிராவிட் நம்பிக்கை:
இந்திய அணி இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் என கேப்டன் டிராவிட் கூறியுள்ளார்.செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், முதல் இரு போட்டிகளிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.இப்போட்டியிலும் வெற்றி பெறுவோம்.
டெண்டுல்கர் சிறப்பாக ஆடி பார்முக்குத் திரும்புவார் என நம்புகிறேன். முக்கிய வீரர்கள் கடந்த போட்டியில்சரியாக ஆடவில்லை. இந்த முறை அவர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என நம்புகிறேன்.
திணேஷ் கார்த்திக் சிறப்பாக பேட் செய்கிறார், பீல்டிங் செய்கிறார். அவர் கட்டாக் போட்டியில் இக்கட்டானநிலையில் பேட்டிங் செய்த விதம் மிகவும் சிறப்பானதாக இருந்தது. மேற்கு இந்திய அணியின் பந்துவீச்சை அவர்மிகத் தைரியமாக எதிர்கொண்டார் என்றார்.
லாரா விளையாடுவார்?:
இதற்கிடையே காயம் காரணமாக கடந்த போட்டியில் பங்கேற்காத மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன்பிரையன் லாரா இன்றைய போட்டியில் விளையாடக் கூடும் எனத் தெரிகிறது. இன்றைய பேட்டி குறித்து லாராசெய்தியாளர்களிடம் பேசுகையில்,
இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களது வேகப் பந்துவீச்சாளர்கள் தயாராக உள்ளனர்.முதல் இரு போட்டிகளிலும் எங்களது வீரர்கள் சிறப்பாகவே விளையாடினர். ஆனால் அதிர்ஷ்டம் எங்கள் பக்கம்இல்லாமல் போய் விட்டது. ஆனால் அடுத்த இரு போட்டிகளிலும் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள்வெற்றியைப் பறித்துத் தருவார்கள் என்றார்.
இன்றைய போட்டியில் உள்ளூர் நாயகன் திணேஷ் கார்த்திக் விளையாடுவதால் ரசிகர்கள் படு உற்சாகமாகஉள்ளனர். இருப்பினும் கங்குலி ஆடாதது அவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
ரசிகர்களுக்குக் கட்டுப்பாடுகள்:
இன்றைய போட்டி பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்குகிறது. போட்டியைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு பல்வேறுகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வெடிபொருட்கள், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள், கத்தி, சிகரெட், லைட்டர்கள், தீப்பெட்டிபோன்றவற்றை கொண்டு வரக் கூடாது.
வீடியோ கேமரா, கேமரா போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது.
சிறிய பிளாஸ்ட் கேன்களில் குடிநீர் மட்டுமே கொண்டு வர அனுமதி உண்டு. கண்ணாடியால் ஆன எந்தப்பொருட்களையும் கொண்டு வரக் கூடாது.
சிப்ஸ் போன்ற சிறு தீனிகளை மட்டும் கொண்டு வரலாம், சாப்பாடு பொட்டலத்தைக் கொண்டு வரக் கூடாது.
தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்வோர் மீது தேச அவமதிப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
4,000 போலீசார்:
போட்டியின் பாதுகாப்புக்காக 4 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிர சோதனைக்குப் பின்னரேமைதானத்திற்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். காலை 11 மணி முதலே ரசிகர்கள் உள்ளே செல்லஆரம்பித்துவிட்டனர்.
போட்டி ஆரம்பித்த பிறகு ரசிகர்கள் உளளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நினைவு தபால் தலை-தயாநிதி வெளியிட்டார்:
இந் நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பவள விழா நினைவு தபால் தலையை மத்திய தொலைத் தொடர்புமற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் வெளியிட்டார்.
சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இந்த விழாவில், இந்திய அணி கேப்டன் ராகுல் டிராவிட், சச்சின்டெண்டுல்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கடந்த 1930ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பவள விழா இந்த ஆண்டுகொண்டாடப்படுகிறது. இதையொட்டி நினைவு தபால் தலை மற்றும் விழா மலர் வெளியீடு நடந்தது.
தயாநிதி தபால் தலைையை வெளியிட ராகுல் டிராவிட் பெற்றுக் கொண்டார். அதேபோல பவள விழா மலரைதயாநிதி வெளியிட, டெண்டுல்கர் பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசனும்உடனிருந்தார்.
டிராவிடும், டெண்டுல்கரும் பேசுகையில், சென்னை ரசிகர்களைப் பாராட்டிப் பேசினர்.
உலகின் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் விளையாட விரும்பும் மைதானம் சேப்பாக்கம்தான். காரணம் இங்குள்ளரசிகர்கள் கிரிக்கெட்டை வெகுவாக ரசிப்பவர்கள், எந்த இக்கட்டான நிலையில் இருந்தாலும் கோபப்படாமல்,ஊக்கப்படுத்தி உற்சாகம் அளித்து நம்மை விளையாட வைப்பவர்கள். மிகச் சிறந்த ரசிகர்கள் சென்னைரசிகர்கள்தான் என்றனர்.












Click it and Unblock the Notifications