தேமுதிக பிரமுகர் படுகொலை-அண்ணன் உயிர் ஊசல்
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே தேமுதிகவைச் சேர்ந்த பிரமுகர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அவருடன் சேர்த்துவெட்டப்பட்ட அவரது அண்ணனான தேமுதிக கவுன்சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் அடுத்து உள்ள கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன்கள் செல்வக்குமார்,செந்தில்குமார். இருவரும் தேமுதிகவைச் சேர்ந்தவர்கள். அண்ணன் செல்லக்குமார் திருவள்ளூர் ஒன்றியகவுன்சிலராக இருக்கிறார். தம்பி செந்தில்குமார் கிளைச் செயலாளராக இருந்து வந்தார்.
அவர்களுக்கும், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜேம்ஸ், மதன் ஆகியோருக்கும் இடையே தேர்தல் முன்பகைஇருந்து வந்தது. இரு தரப்பினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், திருவள்ளூரில் இருந்து இரவில் தனது மோட்டார் சைக்கிளில் கூடப்பாக்கத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த செல்வகுமாரை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாள்களால் வெட்டித் தள்ளியது.
இதில் அவரது தலை, தோள்பட்டை ஆகிய இடங்களில் வெட்டு விழுந்தது. உயிர் பிழைக்க அந்தக் கும்பலின்பிடியிலிருந்து தப்பி ஓடினார் செல்லக்குமார். ஆனாலும் விடாத அக்கும்பல் விரட்டி விரட்டி வெட்டியது.
இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் விழுந்தார். அவர் இறந்து விட்டதாக எண்ணிய கும்பல் அங்கிருந்து தப்பிஓடியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்லக்குமாரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கிருந்து பின்னர் சென்னை அரசு பொது மருத்துவனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்குசெல்லக்குமாரின் உயிர் ஊசலாடி வருகிறது.
இதற்கிடையே, கூடப்பாக்கத்திற்கும், வெள்ளவேடுக்கும் இடையே பெட்ரோல் பங்க் ஒன்றின் பின்புறம்செந்தில்குமார் பலத்த காயங்களுடன் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தேமுதிக பிரமுகர்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டது, இன்னொருவர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மருத்துவமனையில் செல்லக்குமாரை நேற்று இரவு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து நலம்விசாரித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசுகையில், இந்தக் கொலை மற்றும் தாக்குதல் வன்மையாககண்டிக்கத்தக்கது. இருவரின் குடும்பத்திற்கும் தேமுதிக அனைத்து உதவிகளையும் செய்யும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications