வைகோவை வைத்து கொண்டு ஜெ. பேசலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டி தமிழக அரசை விமர்சிக்க,வைகோவை அருகே வைத்திருக்கும் ஜெயலலிதாவுக்கு தகுதியே இல்லை என்று திமுக பொருளாளரும்,மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வெடிபொருட்களுடன் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள்நுழைந்தது எப்படி என்று கேட்டதோடு, வெடிபொருட்கள் கடத்தல் மட்டுமல்ல, விடுதலைப் புலிகள் ஊடுறுவலும்தமிழகத்தில் இருக்கிறது என்று ஜெயலலிதா ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு 9 பேர் இரும்பு உருளைகளை இலங்கைக்கு கடத்த இருந்ததாக செய்தி கிடைத்ததும்,தமிழக போலீஸார் உடனடியாக அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்துவிசாரணையும் நடந்து வருகிறது.

இதுபோல ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் பலமுறை நடந்துள்ளது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்போதைய சம்பவத்தில் எந்தவித தாதமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல்காழ்ப்புணர்ச்சி காரணமாக, திமுக அரசு மீது குற்றம் சாட்ட வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு குற்றச்ச்டைசொல்கிறார் ஜெயலலிதா.

ஆனால் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான வைகோவை தன் அணியிலே, பக்கத்திலேயே வைத்துக்கொண்டு இதுபோன்ற அறிக்கை விட ஜெயலலிதாவுக்கு என்ன தகுதி உள்ளது?

விடுதலைப் புலிகளுக்கு தான் தான் எல்லாம் என்று முழங்கும் வைகோ, ஜெயலலிதாவின் இந்த அறிக்கைக்குஎன்ன பதில் சொல்லப் போகிறார் என்று கூறியுள்ளார் ஆற்காடு வீராசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+