தமிழகத்தில் புலிகள் ஊடுருவல்: ஜெ புகார்
சென்னை:திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் கருணாநிதி பழமொழி போல ஒன்றைச் சொல்வார். நாங்கள் ஆட்சியில் இருந்தால் நீரிலிட்ட"பாஸ்பரஸ், ஆட்சியை விட்டு இறங்கினால் கூரையிலிட்ட "பாஸ்பரஸ் என்று.
ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் தன்னை "பாஸ்பரஸ் என்கிறார். பாஸ்பரஸ் என்ன வேலையைச்செய்யும் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். தானே பற்றி அருகிலிருப்பதையும் எரிக்கும் சக்தியும் அதன்மூலம் அழிக்கும் சக்தியும் கொண்டது பாஸ்பரஸ்.
கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் கூடவே நிகழ்வுகளும் அவ்வப்போது நடப்பதுண்டு. கடந்த சில நாட்களாகபத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் ஆக்கிரமித்திருக்கும் செய்தி இலங்கை தமிழர்கள் உள்பட 9 பேர் கைது. 100மூட்டை வெடி பொருட்களை அவர்களிடமிருந்து கைப்பற்றியிருக்கின்றனர். இது ஒருவரிச் செய்தி போலத்தோன்றும். உண்மையில் இந்த ஒரு வரிச் செய்திக்குள் ஓராயிரம் செய்திகள் புதைந்திருக்கின்றன.
இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் திமுக மைனாரிட்டி ஆட்சியில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.கருணாநிதி ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மற்றும் உளவுப் பிரிவு முற்றிலுமாக கெட்டு விட்டது என்கிற கவலையும்தான் நமக்கு மேலோங்கி நிற்கிறது.
வெடிப் பொருட்கள் கடத்தல் மட்டுமல்ல, விடுதலைப்புலிகள் ஊடுருவல் மட்டுமல்ல, கோடம்பாக்கம் பகுதியில்ஒருவரது வீட்டில் குண்டு வெடித்திருக்கிறது. அந்த வீட்டுக்குரியவர் மீது மதுரைத் தேர்தலில் குண்டு வீசியவழக்கும் இருக்கிறது. இவையெல்லாம் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கு உதாரணங்களாக இருக்கமுடியாது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவையில் பயங்கரவாதிகள் பிடிப்பட்டனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுத்தோம். பயங்கரவாத இயக்கங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தோம். அதிமுக ஆட்சிக் காலத்தில்விடுதலைப்புலிகள், பயங்கரவாதிகள், தமிழகத்திற் குள் காலடி எடுத்து வைக்கவே அஞ்சினர்.
காவல்துறை கட்டுக் கோப்பாக இருந்தது. இன்று நிலைமை என்ன? காவல்துறை நிலை குலைந்து ரெளடிகளின்முன்னே கைகட்டி நிற்கிறது. பயங்கரவாதிகள், சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
மக்கள் விழிப்பாக இருந்து இந்த திமுக மைனாரிட்டி அரசுக்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும். பிரச்சனையைவேரறுக்க இந்த அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. எதிர்க்கட்சிகளை சமாளிக்கவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நேரடியாக தொடர்பு கொண்ட ஒருவர், சீருடை தைத்துக் கொடுத்த ஒருவர்,இன்று மத்திய அமைச்சராகவே ஆகிவிட்ட பின் இதுவும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கத் தான் செய்யும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications